பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

6

45

மறுக்கவில்லை. எங்கள் கட்சியைப் பொறுத்த வரையில் இவ்விதம் ஏதாவது ஒருவர் பேசினால், உடனடியாக தலைவரால் மறுக்கப்பட்டு மன்னிப்புக் கேட்கின்ற நிகழ்ச்சியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்பேர்ப்பட்ட நிகழ்ச்சி ஆளும் தரப்பில் இருக்கிறதா என்பதை நான் கேட்க விரும்புகிறேன். நேற்று முன் தினம் கனம் அமைச்சர் அவர்கள் எதிர்கட்சியினர் தொகுதிக்கு என்று ஒன்றும் செய்யாமல் இருப்பதில்லை, அப்படி சொல்வது தவறு என்று கூறினார்கள். யார் வெற்றி பெற்றாலும் பொதுவாக செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் செய்துகொண்டுதான் இருப்போம். இதில் கட்சி வித்தியாசமொன்றும் காட்டுவதில்லை என்ற நீதி வாக்கியத்தை கனம் நிதி அமைச்சர் அவர்கள் எடுத்துக் கூறினார்கள். சென்ற தடவை குளித்தலை தொகுதியில் கனம் அமைச்சர் கக்கன் அவர்கள் பேசுகின்ற நேரத்தில் “குடகனாறு திட்டமா வேண்டும் கருணாநிதிக்கல்லவா வோட்டு

போட்டீர்கள். அவரிடம் போய் கேளுங்கள் என்று பேசியிருப்பதை (கனம் திரு. கக்கன் எழுந்தார்) இந்த மன்றத்தின் முன்னால் நான் இதை எடுத்துச் சொல்லுகின்ற நேரத்தில் கனம் அமைச்சர் கக்கன் அவர்கள் அப்போது மறுக்கவுமில்லை. ஆனால் இப்போது மறுப்பதற்கு ஆதாரத்தைத் தேடுகிறார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

கனம் திரு. பூ. கக்கன் : கனம் சபாநாயகர் அவர்களே, குளித்தலையில், மதிப்பிற்குரிய அங்கத்தினர் திரு. கருணாநிதி அவர்களின் பக்கத்துணையாக நின்று, இப்போது சட்டசபை அங்கத்தினராக இருக்ககூடியவர் - அவர்கள் கூட, அந்தமாதிரி நான் சொல்லவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. மு. கருணாநிதி : அந்த அங்கத்தினர் அப்போதே தங்களை மறுத்துப் பேசினதும் எங்களுக்குத் தெரியும். அடுத்து, பெண்களைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தார் ஆபாசமாகப் பேசுகிறார்கள், மரியாதை கெட்டு பேசுகிறோம் என்று கனம் அம்மையார் ஒருவர் இந்த மன்றத்தில் குறிப்பிட்டார்கள். நாங்கள் பெண்களைப்பற்றி உதாரணம் காட்டுவது தவறா, எங்கள் தலைவர்களில் யாராவது