பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

୧୮

து

47

தரப்படுகிற சம்பளம், கவர்னர் பதவிக்காக ஆடம்பரமாக செய்யும் செலவினங்கள், இவைகள் எல்லாம் ஆண்டுதோறும் 10 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இத்தகைய செலவுகள் மக்களுடைய வரிப்பணத்திலிருந்து செலவு செய்யவேண்டாம் என்ற கருத்தைத்தான் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கவர்னருடைய சம்பளத்திற்கு என்று 59,400 ரூபாயும் அவர்களுடைய காரியாலயச் செலவிற்காக 70,200 ரூபாயும் சுற்றுப்பிரயாணத்திற்காக 66,000 ரூபாயும் விருந்து கேளிக்கைகளுக்காக 25,000 ரூபாயும், மருத்துவ பராமரிப்புக் காக 22,300 ரூபாயும் ஆகிய இப்படிப்பட்ட செலவுகளை எல்லாம் சேர்த்து 62-63-ம் ஆண்டுக்கு 6,05,100 ரூபாய் என்று போடப்பட்டிருக்கிறது. 61-62ல் 5,82,000 ரூபாயாக இருந்தது. 1960-61ல் ரூ. 4,83,711 ஆகியிருக்கிறது. கவர்னருடைய வீட்டுப் பராமரிப்புக்கு, மாளிகை பராமரிப்புக்கு ஆண்டுதோறும் 2-3 லட்ச ரூபாய் ஆகிறது. ரிப்பேர் செலவு என்ற வகையில் ஆண்டுதோறும் 2 லட்ச ரூபாய் ஆகிறது. 1960-61ல் பராமரிப்புக்கு ரூ. 3,62,000 ஆகியிருக்கிறது-ரிப்பேருக்கு ரூ. 1,90,000 ஆகியிருக்கிறது. 1961-62ல் பராமரிப்புக்கு ரூ. 2,41,400 ஆகியிருக்கிறது - ரிப்பேருக்கு ரூ. 2,21,000 ஆகியிருக்கிறது. 1962-63ல் பராமரிப்புக்கு ரூ. 2,85,000 போடப்பட்டிருக்கிறது- ரிப்பேருக்கு ரூ.2,21,000 போடப் பட்டிருக்கிறது. இப்படி ஆண்டுதோறும் 2 லட்சம் 21/2 லட்சம் ரூபாய் இந்த மாளிகைக்கு ரிப்பேர் செலவு ஆகிறது என்று கணக்கு தரப்படுகிறது. அதற்கு விவரங்கள் இல்லாவிட்டாலும், கவர்னர் என்ற பெயரால் ரூ. 10 லட்சம் செலவழிப்பது நியாயம் தானா? தர்மம்தானா? காந் வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று சொல்லக் கூடிய ஆளும் கட்சி அமைச்சர்களைப் பார்த்து, தலைவர் அவர்களே, உங்கள் மூலமாக, இப்படிப்பட்ட செயல் மேலும் மேலும் தொடரலாமா என்று கேட்க விரும்புகிறேன். கவர்னர் பதவி தேவைதானா வி என்று கேட்டால் மாநிலத்தில் குழப்பம் ஏற்பட்டால், குழப்பம் எற்பட்டு கட்சி மந்திரி சபை கலைக்கப்பட்டால், அப்போது கவர்னர் ஆட்சி நிறுவுவதற்கு கவர்னர் தேவை என்று, ஊரிலே தீப்பிடிக்கும், அதற்காக தீ அணைக்கும் படை போல கவர்னரை வைத்திருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். மின் விளக்கு அணைந்து விட்டால் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கிறோம்.

கு