பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

று

99

நண்பர்கள் வற்புறுத்தலுக்கு இணங்க; நான் எனது பிறந்த ஊரான "திருக்குவளை உள்ளிட்ட நாகைத் தொகுதியில் நிற்கலாமென்று முடிவு செய்துகொண்டு சென்னைக்கு வந்தேன். சென்னையில் அண்ணா அவர்கள், அன்றைய தலைமைக் கழகமிருந்த ராயபுரம் அறிவகத்தில் இருந்தார்கள். சந்தித்தேன். அண்ணா கையாலேயே என் பெயரை "குளித்தலை தொகுதி"யில் குறிப்பிட்டு; என்னைக் கேட்காமலேயே அறிவித்துவிட்டார். மறுத்துரைக்காமல் குளித்தலையில்

வேட்பாளராக நின்றேன். அந்தத் தேர்தலில் தூத்துக்குடி தொடங்கி, நாகை வரையில் இருந்த அனைத்துத் தொகுதிகளிலும் நான் ஒருவன் மட்டுமே

வென்றேன்.

ஆம்;

குளித்தலையில்

சட்டப்பேரவை

நுழைவுக்கான கதவு இப்படி எனக்குத் திறக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையில், நான், பேராசிரியர் க. அன்பழகனார், ஏ. வி. பி. ஆசைத்தம்பி, திருமதி சத்தியவாணிமுத்து, ஏ. கோவிந்தசாமி, ப. உ. சண்முகம், விருதாசலம் எம். செல்வராஜ், எம். பி சுப்பிரமணியம், ம. பா. சாரதி, களம்பூர் அண்ணாமலை, ஆனந்தன், இருசப்பன், பி. எஸ். சந்தானம், சி. நடராஜன் 1ஆகிய நாங்கள் 15 பேர் வெற்றிபெற்று, சட்டப்பேரவையில் இடம்பெற்றோம்.