பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

து

ல்

7-ம் வகுப்புப் புத்தகம் அரசினால் அங்கீகரிக்கப்பட்டதாக புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஆனால், இது அரசினரால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதே ஆராய்ச்சிக்குரிய விஷயம். 1961-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இது அரசினரால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், புத்தகத்தில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு 1962 என்று போடப்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தைப் பற்றிய வேறுபாட்டைப்பற்றி கவலையில்லாவிட்டாலும், இந்தப் புத்தகம் பாடப்புத்தகக் குழுவினால் அங்கீகரிக்கப்படத்தக்கத் தரம் வாய்ந்ததா, தகுதி மிக்கதா என்று நான் அறிய விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் கவி ரவீந்திரநாத் தாகூரின் தேசிய கீதம் அச்சிடப்பட்டிருக்கிறது. இந்த கீதத்தில் மொத்தம் ஏறத்தாழ 5 அல்லது 6 பிழைகள் இருக்கின்றன. அரசினர் எப்படி இந்தப் புத்தகங்கள் இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு மாதிரி பிரதியை புத்தகங்கள் வெளியிடுபவர்களுக்கு அனுப்பி யிருக்கிற அதே நேரத்தில்,

வி

ஜன கண மன அதிநாயக ஐயஹே பாரத பாக்ய விதாதா

பஞ்சாப சிந்து குஜராத மராட்டா

திராவிட உத்கல வங்கா

விந்த்ய ஹிமாசல ஜமுனா கங்கா உச்சல ஜலதி ரங்கா

ல்

ல்

என்றிருப்பதில், முதல் வரியில் 'ஜெயஹே' என்பதற்கு 'ஐயஹே' என்று தவறாக அச்சிடப்பட்டிருக்கிறது. "விந்திய ஹிமாசல" என்பதற்கு "விந்த்ய ஹிமாசல" என்றிருக்கிறது. “யமுனா” என்பதற்கு “ஜமுனா” என்றிருக்கிறது. பக்கத்திற்குப் பக்கம் இவ்வாறு அபரிமிதமான பிழைகள் இருக்கின்றன. இந்தக் குறள் நெறிக் கதைகள் என்ற புத்தகத்திலே பல இடங்களிலே “த்” கிடையாது. பல இடங்களில் “ப்” கிடையாது. பல இடங்களில் “கொண்டான்" என்பதற்கு "கோண்டான்" என்ற இருக்கிறது. "பெற்றான்" என்பதற்கு "பேற்றான்" என்றிருக்கிறது. ஐந்து பிழைகளுக்கு மேற்பட்டிருந்தால் அந்தப் புத்தகத்தை டெக்ஸ்ட்

5