பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

65

இலட்சியமாக இருக்கக்கூடாது. அவர்கள் நல்வாழ்க்கை நடத்த வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது சர்க்காருடைய பொறுப்பாகும்.

குற்றத்தை மெய்ப்பிக்கும் சாட்சியங்களைப் பற்றியும் குற்றத்திற்குரிய தண்டனைகளைப்பற்றியும்தான் எம்மைப் போன்ற நீதிபதிகள் கவனிக்க வேண்டும். குற்றத்திற்கான க காரணங்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு சீர்திருத்தவாதி அல்லது அரசியல்வாதியைச் சேர்ந்தது.

இந்த வழக்கில் செய்யப்பட்ட குற்றம் தனி மனிதர் செய்த குற்றமல்ல ; சமூகத்தையே உறுத்துகின்ற பரிதாபகரமான செயல். ; இம்மாதிரி நடைபெற அனுமதிக்கக்கூடாது.

ஏனைய நாடுகளிலே வறுமையில் உழல்பவர்களுக்கு, ஏதாவது வேலையளித்து, தேவையான ஊதியம் அளிக்கும் நிறுவனங்கள் ஏராளம் இருக்கின்றன.

டது.

நமது மாநிலம் விவசாயத்தை முக்கியமானதாகக் கொண்டது சாகுபடி காலத்தில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன ப்படிப்பட்ட மாநிலத்தில் இது போன்ற நிறுவனங்கள் ஏற்படுத்துவதற்குத் தொல்லை இருக்காது. அப்படி ஏதாவது தொல்லைகள் இந்தப் பிரச்சினையில் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க வேண்டும். எதிர்காலத்திலாவது இது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்படக்கூடாது.

பரிதாபத்திற்குரிய இந்த அப்பீல் மனுதாரரும் அவருடைய கணவரும் நல்ல உடல் வலிமையுள்ளவர்களாக இருந்தும், பிச்சையெடுக்கத் துணியாத காரணத்தினால் இத்தகையதோர் இழிவான வழிகளில் இறங்க நேரிட்டதற்குத் தேவை யில்லாதவாறு சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு" என்று தங்களுடைய தீர்ப்பிலே ரண்டு நீதிபதிகளும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதை நான் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதற்கு எடுத்துக் கூறுவதாகத் தயவுசெய்து கருதக் கூடாது. நீதிபதிகள் சொன்ன கருத்தை இந்த து அரசினர் தங்கள் இதயத்தில் ஏற்றி, நாட்டிலே தற்கொலைக்கு ல் வழி இல்லாதபடி, ஒரு முழக் கயிற்றை, ஒரு துளி விஷத்தை,

6

ம்கு