கலைஞரின் சட்டமன்ற உரைகள்
489
ஈரோடு மஞ்சள் மற்றும் மசாலாப் பொடிகள் சிறு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, வணிகச் சின்னமிடப்பட்ட அல்லது சின்னமிடப்படாத - பஜ்ஜி, முறுக்கு போன்றவை தயாரிக்கப் பயன்படும் மசாலா கலந்த மாவுப் பொருட்கள்மீது விதிக்கப்படும் விற்பனை வரி 11 விழுக்காட்டி லிருந்து 4 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது.
திருநாவுக்கரசு அவர்கள் சொன்னார்கள்; இன்றைக்கும் சொன்னார்கள் பல பேர்; தமிழ்நாடு அகர்பத்தி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அகர்பத்தி மீது விதிக்கப்படும் விற்பனை வரி 8 விழுக்காட்டி லிருந்து தற்போது 4 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது. முழுமையாக குறைத்தால் 5 அல்லது 6 கோடி ரூபாய் இழப்பு ஆகும். அதனால் 4 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது.
அ
சித்த மருந்துகள் பற்றி இங்கே பேசப்பட்டது. அப்போது நான் இங்கு இல்லை. சித்த மருந்து உயர்ந்ததா அல்லது அலோபதி உயர்ந்ததா என்றார்கள். நம்முடைய வீராசாமி அவர்களும், மத்திய அரசினுடைய அமைச்சரும் கலந்து கொண்ட மாநாட்டில் பேசும்போது நான் சொன்னேன். இந்த இரண்டைப் பற்றியும் சொன்னேன். அலோபதியா, சித்தமா என்கிறபோது 'வரும் முன் காப்பது சித்த மருத்துவம், வந்த பின் காப்பது அலோபதி மருத்துவம்' என்று நான் அன்றைக்கே சொல்லியிருக்கிறேன். எனவேதான் சித்த மருத்துவத்துக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முழு வரிவிலக்கை யுனானி மருந்துகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஏற்று, யுனானி மருந்துகள் மீது விதிக்கப்படும் 8 விழுக்காடு வரி அறவே நீக்கம் செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி). இந்த மேற்கண்ட வரிக் குறைப்பு மற்றும் வரி விலக்கு ஆகியவை, வரும் 1-6-1999 முதல் அமலுக்கு வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ம்
C
மேலும் சில முரண்பாடுகள், உறுப்பினர் திரு. ஜி நிஜாமுதீன் அவர்கள் தெரிவித்ததைப்போல, கவரா, லெட்டரா என்றெல்லாம் இருக்கிறது. அதிலே அச்சடிக்கப்பட்ட தாளுக்கும், அச்சடிக்கப்படாத கவருக்கும் உள்ள வித்தியாசங்கள் எல்லாம்