490
மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது
இருக்கின்றன. இந்த முரண்பாடுகளைப்பற்றிப் பலரும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பற்றி அறிய ஏற்கெனவே அமைக்கப்பட்டதைப் போன்ற, வரி சீரமைப்புக் குழு மீண்டும் அமைக்கப்பட்டு, அவர்களுடைய கருத்துரைகளையும், பரிந்துரைகளையும் கேட்டு அரசு ஆவன செய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழக அரசு ஏற்பட்ட பிறகு, இதுவரை தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகளார், திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, வ.உ.சிதம்பரனார், வ.வே.சு. அய்யர், பரலி நெல்லையப்பர், வ.ரா., ச.து.சு. யோகி, சா. கணேசன், கல்கி போன்றவர்களின் நூல்களையெல்லாம் நாட்டுடைமையாக்கியதை அனைவரும் அறிவீர்கள். அந்த வரிசையில், சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும், பத்திரிகையாளராகவும், நாடக நடிகராகவும், எழுத்தாளராகவும், திகழ்ந்து, நாடகம், சிறுகதை, அரசியல் ஆகிய துறைகளில் காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, பிளேட்டோவின் அரசியல், கிரேக்கக் குடியரசு, அரிஸ்டாட்டில், இட்லரின் மெயின் கேம்ப் போன்ற அரிய பல நூல்களை ஆக்கித் தந்தவருமான திரு. வெ. சாமிநாத சர்மா அவர்களின் நூல்களையும் நாட்டுடைமை யாக்கிட இந்த அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
மற்றொன்று, மூத்த பத்திரிகையாளரும் - தமிழில் மூத்த பத்திரிகையாளரும் தமிழில் பல நூல்களை எழுதி வெளியிட்டிருப்பவருமான திரு. ஐ. சண்முகநாதன் அவர்கள் 'ஒரு தமிழன் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு' என்ற பெயரில் ஒரு பெரிய வரலாற்று நூலை எழுதி வெளியிட, அரசிடம் மானியத் தொகை கோரியுள்ளார். நேற்று அவரை அழைத்து, நானும், நம்முடைய நிதித்துறைச் செயலாளரும், கலந்து பேசினோம். ஓர் அருமையான நூலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கில பாணியில் தயாரிக்கப்படுகிற அந்த நூல் “ஒரு தமிழனுடைய பார்வையில் 20ஆம் நூற்றாண்டு".