பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

491


ம்


உலகம் முழுவதும் 20ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற சம்பவங்களை எல்லாம் படங்கள் மூலம் சிறு குழந்தைகளும் கூடப் படித்துத் தெரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு அந்த நூலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். 'ஒரு தமிழன் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு' என்ற பெயரில் ஒரு வரலாற்று நூலை எழுதி வெளியிட, அரசிடம் மானியத் தொகையும், அரசு சார்பிலே நூலகங்களிலும், அரசு அலுவலகங்களிலும் அந்நூல் இடம்பெற அரசே 2000 பிரதிகளை வாங்கிக்கொள்ளவேண்டுமென்றும் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். வருங்காலத் தலைமுறையினருக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நூல் பெரிதும் பயன்படும் ம் என்பதால், திரு. ஐ. சண்முகநாதன், "ஒரு தமிழன் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு” என்ற நூலினைத் தயாரித்து வெளியிட உதவியாக மூன்று இலட்சம் ரூபாயை அரசின் சார்பில் மானியமாக வழங்குவதென்றும், (மேசையைத் தட்டும் ஒலி). அந்த நூலின் 2 ஆயிரம் பிரதிகளை அரசு சார்பில் வாங்குவது குறித்து, நூல் அச்சிடும் பணி முடிவுற்ற பிறகு முடிவெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது என்பதை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

ம்,

நேற்றையதினம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து இங்கே அறிவிக்கப்பட்டபோதிலும் ஓய்வு பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் குறித்து அறிவிக்கப்படவில்லை. அவர்களுடைய கோரிக்கையை அவை முன்னவரும், நானும், மீண்டும் பரிசீலித்து இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். ஓராண்டுகால அளவிற்கு மட்டுமே பணியாற்றிய முன்னாள் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் களுடைய ஓய்வூதியம் இதுவரை 2 ஆயிரம் ரூபாய் என்று இருந்ததை, இனிமேல் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப் படும். (மேசையைத் தட்டும் ஒலி) அதுபோலவே ஓராண்டுக்கு மேல் பணியாற்றி ஓய்வு சட்டப்பேரவை பெற்ற உறுப்பினர்களுக்கு இதுவரை ஓய்வூதியம் 3 ஆயிரம் என்று இருந்ததை, இனிமேல் 5 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி). ஏன் என்றால், நான்

கு