பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

493


கு


பொறுமையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்லி வைத்தேன். இந்த விளக்கங்களைக் கேட்டதையே சாக்காக வைத்துக்கொண்டு, நான் ஏற்கெனவே அறிவித்ததைப்போல, சட்ட அமைச்சர் மாண்புமிகு ஆலடி அருணா தலைமையிலே ஒரு குழு அமைத்து, செலக்ட் கமிட்டிக்கு விடலாமா என்று யோசித்தபோது, நம்முடைய சட்டப் பேரவையினுடைய செயலகத்தின் மூலமாகப் பெறப்பட்ட தகவல், 'இங்கே நிறைவேறிய பிறகு செலக்ட் கமிட்டிக்கு விட முடியாது' என்று சொன்னதன் காரணமாக, இதை நாம் நிறைவேற்றப் போவதில்லை என்று அறிவித்துவிட்டோம். எனவே, திரும்பப் பெற்றுவிட்டோம் என்பதிலே அர்த்தமே இல்லை. நடை முறைக்கே வரவில்லை நடைமுறைக்கு வந்திருந்தால்தான் திரும்பப்பெற்றோம் என்றாகும். ஒரு வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், தாக்கல் செய்யப்பட்ட பிறகு வாபஸ் பெறுவது என்பது வேறு. தாக்கல் செய்யாமலேயே, தாக்கல் செய்வதற்காகப் போகும்போதே திரும்பிவிடுவது வேறு. ஆகவே, இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டதாக நீங்கள் கருத வேண்டாம். இந்தச் சட்டம் அமலுக்கு வராது என்பதைத்தான் அழுத்தம் திருத்தமாக நான் கூறியிருக்கின்றேன் என்பதைத் தெரிவித்து, இன்று காலை முதல் இதுவரையில் நல்ல பல கருத்துக்களை, இந்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதற்குப் பகிர்ந்தளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து, இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டு, இந்த அளவில் அமைகின்றேன். நன்றி, வணக்கம். (மேசையைத் தட்டும் பலத்த ஒலி)