பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

495


பின்னுக்குத் தள்ளப்பட்டே கிடக்கவண்டும் என்ற அந்தக் கொள்கையிலிருந்து மக்களையும் விடுவித்து, தாழ்த்தப் பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும், ஓரம் கட்டப்பட்டவர்களையும் விடுவித்த இயக்கம்தான் அன்றைக்கு நீதிக் கட்சியாக, சுயமரியாதை இயக்கமாக ஜஸ்டிஸ் கட்சி என்று க் ஆங்கிலப் பெயரால் அழைக்கப்பட்ட இயக்கமாக திராவிடர் கழகமாக, திராவிட முன்னேற்றக் கழகமாக, பொதுவில் திராவிட இயக்கமாக இன்றைக்குப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம் என்றால் என்ன, அதனுடைய கொள்கை என்ன என்று கேட்கும்போது, திராவிட இயக்கம் என்றால் என்ன என்று அடையாளம் காட்ட வேண்டுமேயானால், இன்றைக்கு சட்டசபையில் நடைபெற்ற வாதம் இருக்கிறதே இந்த விவாதம்தான் திராவிட இயக்கம் என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன் (மேசையைத் தட்டும் ஒலி).

று

1928-ஆம் ஆண்டு அரும்பிய இந்த மலர், இன்று மணம் வீசி ஒரு பெரிய வரலாற்றுப் புதுமையை தமிழ்நாட்டு சட்டப் பேரவையிலே தமிழக அரசிலே, தமிழ் நிலத்திலே உருவாக்கியிருக்கின்றது. இந்த இயக்கம்தான், இன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருக்கின்ற இந்த இயக்கம்தான் 1951 ஆம் ஆண்டு கம்யூனல் ஜி. ஓ. செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது இந்த இயக்கத்தினுடைய தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய அன்புக்குப் பாத்திரமான தளபதியாக விளங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழிலே எழுதிய தலையங்கத்திலே இவ்வாறு குறிப்பிடு கின்றார். “ஏமாந்த காலத்திலே ஏற்றம் கொண்டவரால் சமூக நீதி சாக்கடையிலே தள்ளப்பட்டுவிட்டது. சட்டம் என்ற கோல் கொண்டு சுப்ரீம் கோர்ட் இந்திய அரசியல் சட்டத்தைக் காட்டி, வகுப்புரிமை செல்லுபடியாகாது என்ற தீர்ப்புத் தந்துவிட்டது. சட்டம் என்ற கூண்டு, உள்ளே சமூக நீதித் தேன் தேடி அலைவதை தேள் கொட்டியதைப் போல சமநீதி மூலம் தம் முடிந்துபோன வாழ்வைச் சீர்படுத்திக்கொள்ளத் தொடங்கிய மக்களின் முன்னேற்றப் பாதையிலே விழுந்த பேரிடியாகும் இந்தச்சம்பவம். திகைத்துத் திண்டாடும் திராவிடச் சமுதாயம், இரத்தம் கொதிக்க, எண்ணங்கள் கிளர்ச்சி முரசு கொட்ட, எங்கள் முதுகெலும்பு உடைக்கப்பட்டதா? இருதயத்தையோ எத்தர்கள் எடுத்துவிட்டனர். எங்களுக்கா இந்தப் பேரிடி, என்று தமது ஒளியிழந்த கண்களிலே நீர் ததும்ப, ஒலியிழந்த குரல்களிலே