பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

497


பட்டிருக்கின்றது. நேரடி நியமனத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாத காலியிடங் களை மற்ற வகுப்பினர்களைக் கொண்டு நிரப்பக்கூடாது என்ற தடை Ban on De-reservation அறிமுகப்படுத்தப்பட்டதும் 2-7-1989 இல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான்.

நேரடி நியமனத்தில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாத காலி இடங்களை மற்றவகுப்பினரைக் கொண்டு நிரப்பக்கூடாது என்று தடை அறிமுகப்படுத்தப்பட்டது. 21-8-1989-ல் தி.மு.க. ஆட்சியிலேதான்..

அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரப்பப்படாத பணி இடங்களை ஒரு காலவரையறைக்குள் நிரப்புவதற்குரிய வழிவகைகளைக் காண அந்தத் துறையின் அமைச்சர் தலைமையிலே ஒரு குழு அமைக்கப்பட்டது. 13-9-1997-ல் இந்த ஆட்சியிலேதான்.

மிகப்

அதைப்போலவே பிற்படுத்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிரப்பப் படாத பணி இடங்களை டங்களை ஒரு கால வரையறைக்குள், நிரப்ப வழிமுறைகளைக் காண அந்தத் துறை அமைச்சர் தலைமையிலே குழு அமைக்கப்பட்டதும் 1-6-1998-ல் தி.மு.க. ஆட்சியிலே தான்.

இந்தக் குழுவின் அறிக்கைகள் அமைச்சரவை துணைக் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, அவர்கள் தந்த அறிக்கைகள் 11-5-1999 அன்று அமைச்சரவைக் கூட்டத்திலே வைக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மு

நேரடி நியமனங்களில் பத்தும் அதற்கு மேலும் எண்ணிக்கை உள்ள பணிநிலைப் பிரிவுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று இருந்ததை மாற்றி ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கை உள்ள பணிநிலைப் பிரிவுகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தலாம் என்று முடி வெடுக்கப்பட்டு 21-9-1999 இல் அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள நிரப்பப்படாத பின்னடைவுப் பணி இடங்களை முன்கொணர்ந்து நிரப்பும் முறை விரிவுபடுத்தப்பட்டது. 2-5-2000 இல் இந்த ஆட்சியிலே தான்.

17-க.ச.உ.(மா.து.நி-பா.2)