பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


,

ஆதிதிராவிடர்கள் 2537 பேர், பழங்குடியினர் 825 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 2300 பேர்.

'D' தொகுதியில் 1-1-1999 அன்றைய நிலவரப்படி 1,53,138 பேர் அரசுத் துறைகளிலும், 76,496 பேர் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றிலும், ஆக மொத்தம் 2,29,654 பேர் இருக்கின்றார்கள். 'D' தொகுதியில் மொத்தம் உள்ள 2,29,654 பேரில், ஆதிதிராவிடர்கள் 68,897 பேர், பழங்குடியினர் 3430 பேர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 33,021 பேர், பிற்படுத்தப்பட்டோர் 82,875 பேர்.

'D' தொகுதியில் அரசுத் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 1-4-1989 முதல் நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள்; ஆதிதிராவிடர்கள் 657 பேர், பழங்குடியினர் 134 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 2324 பேர்.

இதுவரை அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பல்வேறு தொகுதிகளில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு பேர் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த வெள்ளை அறிக்கையின் மூலமாகத்தான் இந்த விவரங்களை அறிய முடிந்துள்ளது.

ம்

உதாரணமாக மாதம் ஒன்றுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் அடிப்படைச் சம்பளமாக உள்ள 'A' தொகுதியில் 591 ஆதி திராவிடர்களும், 20 பழங்குடியினரும். 665 மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினரும், 4744 பிற்படுத்தப்பட்டோரும் இன்றைய நிலையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 1-4-1989 முதல் இதுவரை அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில், A, B, C ஆகிய நான்கு தொகுதிகளிலும் ஏற்பட்டுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் ஆதிதிராவிடர்கள் 4907, பழங்குடியினர் 1094, மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 5283 பேர். ஆக மொத்தம் 11,264 பின்னடைவு காலிப் பணியிடங்களையும் ஐந்தாண்டுகளுக்குள் நிரப்ப இந்த அரசு உறுதியளிக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தந்திருத்தமாக நான் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).