பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


கூட்டத்திலே நான், பேராசிரியர், நம்முடைய நண்பர் வீரமணி மற்றும் ரமணிபாய், திண்டிவனம் ராமமூர்த்தி போன்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் எல்லாம் அதிலே கலந்துகொண்டு பேசியிருக்கிறார்கள். அதுமாத்திரமல்ல. அந்தப் போராட்டங் களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தோழர் தா. பாண்டியன் அவர்களும் எங்களோடு ஒரே மேடையிலே வந்து பேசினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, கட்சி ரீதியாக கலந்து கொள்ளா விட்டாலும், அதிலேயுள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அதில் கலந்துகொண்டு ஆதரித்திருக் கிறார்கள். எனவே, தமிழ்நாட்டில், எந்தக் கட்சியில் இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற நேரத்தில் எல்லாம் அவர்கள் திராவிட இயக்கத்தை நினைக்காமல் இருக்கமாட்டார்கள். யார் குரல் கொடுத்தாலும், ன்றைக்கு எங்களுடைய பாட்டாளி மக்கள் கட்சியின்

தலைவர்

டாக்டர் இராமதாஸ் குரல் கொடுத்தாலும் எல்லாவற்றுக்கும் அடிபீடம் திராவிட இயக்கம்தான். தந்தை பெரியார்தான். (மேசையைத் தட்டும் ஒலி) நீதிக்கட்சிதான். முத்தையா முதலியார்தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது என்பதை எடுத்துக் கூறி, இந்த நல்ல வெள்ளை அறிக்கையைப் பாராட்டி நல்ல யோசனைகளைச் சொல்லி, இந்த வெள்ளை அறிக்கை செயல்படுவதற்கு ஆக்கப்பூர்வமான யோசனைகளைச் சொன்ன மாண்புமிகு உறுப்பினர்களுக்கும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய அன்பான நன்றியையும் வணக்கத்தையும் கூறி இந்த அளவிற்கு என் உரையை நிறைவு செய்கின்றேன். வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி).