பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

505


உரை : 61

நிதி ஒதுக்கச் சட்ட முன்வடிவு

நாள் : 17.05.2000

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நிதி ஒதுக்க சட்டமுன்வடிவின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் மற்றும் மாண்புமிகு உறுப்பினர்களும் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக்கூறியிருக்கின்றார்கள். இதிலே நிதி ஒதுக்க விவரங் களைப்பற்றிக் கூறுவதற்கு முன்பு இங்குச் சொல்லப்பட்ட அல்லது கேட்கப்பட்ட சில சந்தேகங்களுக்கு என்னுடைய விடைகளை அளிப்பது பொருத்தம் என்று கருதுகின்றேன்.

பதவி இழந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது பற்றி நம்முடைய நண்பர் ஞானசேகரன் அவர்கள் தொடக்கத்திலே கேட்டார். இந்த அரசுதான் 14-11-1980-ல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய ஆட்சியில் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஓய்வூதியமாவது தர வேண்டுமென்கிற ஒரு முடிவை எடுத்து, தர முன்வந்தது. அப்படி முன்வந்தபோது, 10 வருடங்கள் பணி முடித்திருப் பார்களேயானால், அவர்களுக்கு அந்த அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால், அதிலே ஒரு பிரிவினர், 10 ஆண்டுகள் பணி முடிக்காமலேயே வயது மூப்பின் காரணமாக நாங்கள் ஓய்வு பெற்றிருக்கிறோம். எங்களுக்கு அந்தக் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமென்று கேட்டு, அதற்காக நீதிமன்றம் சென்றிருக்கின்றார்கள். நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு இன்னும் வரவில்லை. இந்தச் சூழ்நிலையிலேகூட நாங்கள் கருதிக்கொண்டிருப்பது, இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்த நேரத்தில், இவர்களுக்கும் கூட அதே அளவு ஓய்வூதியம் தராவிட்டாலும், 10 ஆண்டு காலம் அவர்கள் பணிமுடிக்காத காரணத்தால், அவர்கள் மீது