பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


கருணை கொண்டு அல்லது இரக்கம் கொண்டு அல்லது பரிவுகொண்டு, ஒரு குறைந்த அளவாவது ஓய்வூதியம் தரலாம் என்பதுபற்றி அரசு ஆலோசித்துக்கொண்டிருக்கிறது.

இன்னொரு முக்கியமான கேள்வி ஞானசேகரன் அவர்கள் கேட்டார்கள். சந்தனக் கடத்தல் வீரப்பன் என்ன ஆனான் என்பதுபற்றிக் கேட்டார்கள். அதில் உள்ள சிரமங்கள் பலமுறை இந்த அவையிலே விளக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு மாநிலத்தினுடைய பிரச்சினை அல்ல; இரண்டு மாநிலங் களினுடைய காவல் துறைகள் ஈடுபட்டு, இரண்டு மாநில அரசுகள் ல ஈடுபட்டு, நடைபெறவேண்டிய ஒன்று. இந்தப் பகுதி காட்டிலே இருந்தால், பிடிக்கப்போகும்போது அந்தப்பகுதி காட்டுக்கும் அந்தப் பகுதி காட்டிலே பிடிக்கப்போகும்போது இந்தப் பகுதி காட்டுக்கும் பயணம் செய்து இரு அரசுகளையும் கடந்த பல ஆண்டுகளாக வீரப்பன் கோஷ்டியினர் ஏமாற்றிக்கொண்டிருக் கிறார்கள். அதற்கு என்ன செலவு ஆயிற்று என்று திரு. ஞானசேரகன் அவர்கள் கேட்டார்கள். இதுவரையிலே தமிழக அரசைப் பொறுத்தவரையில் அந்தக் காலத்திலே இருந்து இந்தக் காலம்வரையில், இரண்டு மூன்று ஆட்சிகள் மாறிமாறி வந்தாலும்கூட, மொத்தமாக 4 கோடியே 54 இலட்சம் ரூபாய் அதற்குச் செலவாகியிருக்கிறது என்பதை மாத்திரம் சொல்ல விரும்புகின்றேன். இதைவிட அதிகமான செலவு கர்நாடக அரசுக்கு ஆகியிருக்கிறது என்கிற தகவல், அந்த விவரம் எனக்குத் தெரியாது. எனவே தமிழகத்தைப் பொறுத்தவரையிலே நம்முடைய அரசைப் பொறுத்தவரையில் 4 கோடியே 54 லட்சம் ரூபாய் இதுவரையிலே செலவு செய்திருக்கின்றது.

நம்முடைய அ.இ.அ.தி.மு.க.-வினுடைய சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு. சுந்தரம் அவர்கள் இங்கே உரையாற்றும் பொழுது தன்னுடைய தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொன்னார்கள். இன்றல்ல, சென்ற ஆண்டே அவர் இதே குற்றச்சாட்டைச் சொல்லி, நான் ஒரு நீண்ட பட்டியலை இந்த அவையிலே அவருக்கு அளித்திருக்கின்றேன். இரண்டரை ஆண்டு காலத்தில், 52.41 கோடி ரூபாய் அளவிற்குப் பணிகள் சுந்தரம் அவர்களுடைய தொகுதியிலே நடைபெற்றிருக்கின்றன என்பதை நான் அப்பொழுதே ராசிபுரம் தொகுதியிலே நடைபெற்ற அந்தக் காரியங்களை எல்லாம் எடுத்துக்காட்டி