கலைஞரின் சட்டமன்ற உரைகள்
507
இருக்கின்றேன். இருந்தாலும்கூட, திரும்பத்திரும்பச் சொன்னால் அது தொகுதி மக்களிடத்திலே தன்மீது ஆர்வத்தை, ஒரு ஆவலை ஏற்படுத்தும் என்ற அந்த அளவிலே சொல்கிறார் என்றால், அதை நான் விட்டுவிடத் தயாராக இருக்கிறேன். ஆனால், எந்தத் தொகுதியும் புறக்கணிக்கப்படவில்லை. இரண்டரை அல்லது மூன்றாண்டு காலத்தில், சென்ற ஆண்டு நான் வைத்த கணக்கின்படி, வழங்கிய பட்டியலின்படி, 52.41 கோடி ரூபாய் அவருடைய ராசிபுரம் தொகுதியிலே பணிகள் நடைபெற்றிருக் கின்றன என்பதை நான் மீண்டும் ஒருமுறை இங்கே நினைவு படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இராமநாத புரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் வட்டத்தில் ஆனைசேரி கிராமத்திலே ஏற்பட்ட திடீர் பள்ளங்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டார்கள். அதைப்பற்றி செய்தி வந்தவுடன், விசாரித்த அளவில், களிமண் பகுதியாக இருக்கின்ற காரணத்தாலும் ஏற்கெனவே அங்கே சில ஆய்வுகள் நடைபெற்று. அதன் காரணமாகப் பல பகுதிகளிலே பள்ளங்கள் ஏற்பட்டு, அவை மீண்டும் மூடப்பட்டு அதன் காரணமாக திடீர் திடீரென்று இத்தகைய பள்ளங்கள் பூமியிலே ஏற்படுகின்றன. இந்தப் பள்ளம் ஏற்பட்ட பகுதியிலே, தேவையான மண் அள்ளுகின்ற இயந்திரங்களைக் கொண்டு 40 X 40 அடியளவில் பூமியைத் தோண்டி, தற்போது அமைந்துள்ள பள்ளத்தின் அளவினைக் கண்டறிந்து, அதனைச் சரளைக்கல் போன்ற இறுகும் தன்மை கொண்ட மண்ணால் முழுவதுமாக நிரப்பி இறுக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கலாம் என்று சொல்லப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை நான் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு இங்கே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
26,887 கோடி ரூபாய்க்கான அனுமதியை அவையிலே பெறுவதற்கான சட்டமுன்வடிவு இங்கே உங்கள் முன்னால் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த 26,887 கோடியில் 21,494 С கோடி ரூபாய் சட்டமன்றப் பேரவையில் வாக்களிக்கப்படும் voted தொகை ஆகும்; மீதமுள்ள 5,393 கோடி ரூபாய் - Charged - சாட்டப்பட்ட தொகை ஆகும். சாட்டப்பட்ட தொகை என்றால்,