பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


Charged தொகை என்றால், பொதுக் கடன் திருப்பிச் செலுத்த 2,599 கோடி ரூபாய், கடனுக்கான வட்டி 2,749 கோடி ரூபாய், இந்த இரண்டுமே 5,348 கோடி ரூபாய் ஆகிறது. மேலும் நீதி நிர்வாகத்திற்காக 23 கோடி ரூபாய்; ஆளுநர், அமைச்சர்கள், தலைமையிட பணியாளர்கள் என்ற வகையிலே 16 கோடி ரூபாய் ஆக மொத்தம் எல்லாம் சேர்த்து இந்த Charged item 5393 கோடி ரூபாய் ஆகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். Voted item என்று பார்த்தால், அதாவது சட்டசபையிலே வாக்கெடுப்பு நடக்கின்ற Item என்று பார்க்கும்போது, பெரிய அளவிலான மானியங்கள் என்று சொல்லும்போது, கல்விக்கு 4,649 கோடி ரூபாய் கல்விக்கு அடுத்தபடியாக வருவது ஓய்வூதியம். அது 2,593 கோடி ரூபாய். நுகர்பொருள் வழங்கல் - Civil Supplies -1,868 கோடி ரூபாய், ஊரக வளர்ச்சி 1,320 கோடி ரூபாய் நகராட்சி 555 கோடி ரூபாய், மக்கள் நல்வாழ்வு 1763 கோடி ரூபாய் காவல் துறை 1,054 கோடி ரூபாய் இதுவன்னியில் வேறு சில தலைப்புகளிலும் ஓரளவு தொகை இடம்பெறும். சமூக நலத் துறை 624 கோடி ரூபாய், வேளாண்மைத்துறை 888 கோடி ரூபாய், சாலைகள், பாலங்கள் 803 கோடி ரூபாய், பாசனம் 687 கோடி ரூபாய் மாவட்ட நிருவாகம் 578 கோடி ரூபாய், குடிநீர் வழங்கல் 127 கோடி ரூபாய் மற்றும் பல இனங்கள் சேர்ந்து 21,494 கோடி ரூபாய் வாக்கெடுப்பிலே அடங்கும் என்பதை நான் இங்கே அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

முன்கூட்டியே Vote on Account எடுத்ததில் உள்ள 7,009 கோடியே 48 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாயும் இதிலே அடங்கும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்விக்கான ஒதுக்கீடுக்கு அடுத்து, ஓய்வூதியச் செலவினம் என்று நான் குறிப்பிட்டேன். அரசு செலவினங்களில் மிகவேகமாக அதிகரித்து வருகின்ற ஓர் இனம் அதுதான். 1995-96 ஆம் ஆண்டு 787 கோடி ரூபாயாக இருந்தது. 1996-97-ல் அந்த ஓய்வூதியம் 1,070 கோடி ரூபாயாக வளர்ந்தது. 1997-98-ல் ஓய்வூதியம் 1,287 கோடி ரூபாய், 1998-99-ல் 1,692 கோடி ரூபாய், 1999-2000-ல் திருத்தி மதிப்பீட்டின்படி 2,517 கோடி ரூபாய் ஓய்வூதியம், அதுவும் 1-1-1996 முதல் உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியத்தின்