பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

509


நிலுவைத் தொகையில் மீதம் உள்ள 40 விழுக்காடு நடப்பு நிதி ஆண்டிலே வழங்கப்படும் என்றும் நாம் அறிவித்து இருக்கிறோம் என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

நிதிநிலை அறிக்கையிலும் மற்றும் அமைச்சர்கள் இங்கே ஈடுபட்டு நடத்திய மானியக் கோரிக்கைகளினுடைய விவாதங்களிலும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் வெறும் அறிவிப்புக்களாக இருந்துவிடாமல், செயல்படும் ஆணைகளாகத் தயாரிக்கப்பட்டு, அந்த ஆணைகள் எல்லாம் வெளியிடப்படும் நிலையிலே உள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் பலத்த ஒலி.) ஏனென்றால், இந்தத் தீர்மானம் நிறைவேறிய பிறகுதான், அவை நிறைவுற்ற பிறகுதான், அந்த ஆணைகள் வெளியிடப்படுவது மரபு, முறை, சட்டம், விதி. எனவேதான், ஆணைகள் எல்லாம் தயாராகிவிட்டன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

24-3-2000 அன்று வரவு செலவுத் திட்டத்தை,,நிதிநிலை அறிக்கையை இந்த அவையிலே நான் வைத்தேன் என்றால், 27-3-2000-ல் எல்லாத் துறைகளினுடைய செயலாளர்களையும் கூட்டி அருகில் உள்ள நாமக்கல்லார் மாளிகையில் அவர்களை எல்லாம் அழைத்து, நிதிநிலை அறிக்கையைப்பற்றி அவர் களிடத்திலே ஒருமுறை விவாதித்து, இதிலே சொல்லப் பட்டிருக்கின்ற அறிவிப்புக்களையெல்லாம் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று வழக்கம்போல், செயலாளர் களுக்கெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. அதுமாத்திரமல்லாமல் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடைய கூட்டத்தை வருகிற 27, 28 தேதிகளிலே நடத்துகிறோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். செயல்வடிவம் பெற்று, நாம் வழங்கிய அறிவிப்புகளையெல்லாம் மக்களிடத்திலே கொண்டுபோய் செயல்படுத்திட இந்த முயற்சிகள் பெரும் துணையாக இருக்கும் என்பதையும் நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

ஆண்டுத் திட்ட ஒதுக்கீடு என்று பார்த்தால் நாம் 1999-2000 ஆண்டிற்கு திட்ட ஒதுக்கீடாக நிர்ணயித்தது 5,250 கோடி ரூபாய். ஆண்டு இறுதியிலே எதிர்பார்க்கப்படக்கூடிய திட்டச் செலவு 5,415 கோடி ரூபாய். சில மாநிலங்களிலே