பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

511


என்று நான் அன்றைக்குக் குறிப்பிட்டிருக்கிறேன். அதைப் போலவே, இங்கே நம்முடைய நண்பர் ஆளுங்கட்சியின் சார்பில் பேசிய திரு. குத்தாலம் பி. கல்யாணம் அவர்கள் குறிப்பிட்டதுபோல நேற்றையதினம் மாநிலங்களவை உட்பட, இந்த 29 சதவீதத்திற்கு ஒப்புதல் இரு அவைகளிலும் கிடைத்திருக்கிறது. இந்த 29 சதவீத நிதி மொத்த வரி வருவாயில், மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்கிற ஒரு திட்டம் ஐக்கிய முன்னணி ஆட்சியிலே நண்பர் சிதம்பரம் அவர்கள் நிதியமைச்சராக இருந்த அந்தக் காலகட்டத்திலேயே யோசிக்கப் பட்டு, ஆனால் அந்த ஆட்சி உடனடியாகக் கவிழ்ந்து விட்ட காரணத்தால் அல்லது முடிவுற்றுவிட்ட காரணத்தால் அந்த ஆட்சியும், அடுத்து வந்த பா.ஜ.க. ஆட்சியும் சில நாட்கள்தான் இருந்து மறைந்துவிட்ட காரணத்தால், அதிலும் நிறைவேற்ற முடியாமல், இப்போதுதான் அதை நிறைவேற்ற முடிந்திருக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தினுடைய 89-வது திருத்த மசோதா என்று அதற்குப் பெயர். இந்த 29 சதவீதத்தை, மத்தியிலே வர இருக்கின்ற மொத்த வரி வருவாயினுடைய அளவில் 29 சதவீதம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும்போது, இன்னொன்றையும் சொல்லி இருக்கின்றார்கள், 1996-97 முதல் 1999-2000 வரை வழங்கப்படலாம். இப்படி வழங்கப்பட்டால், முன்தேதியிட்டு வழங்கப்பட்டால், கணிசமான தொகை நம்முடைய மாநிலத்திற்குக் கிடைக்கும். அதையும் வைத்துக்கொண்டு மேலும் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொண்டு - இப்போதுகூட இரண்டுமுறை நம்முடைய தலைமைச் செயலாளருடைய தலைமையில், துறைகளுடைய செயலாளர்களுடைய கூட்டம் நடைபெற்றது இன்னும் சிக்கனமாக எப்படி அரசு நிர்வாகம் நடத்தப்படவேண்டும் என்பது பற்றி கருத்துகள் ஆராயப்பட்டிருக்கின்றன. அந்த நடவடிக்கைகளையும் இணைத்து இந்தப் பற்றாக்குறையை நிச்சயமாகச் சரிக்கட்ட முடியும் என்று நான் கருதுகின்றேன். இந்த 29 சதவீதத்தின் மூலமாக வருகின்ற அதிகத் தொகை, பற்றாக் குறையைச் சரிக்கட்டுவது மாத்திரம் அல்ல, உங்களுக்கு நினைவு இருக்கும், திரு. இரத்தினவேல் பாண்டியன், உச்சநீதி