பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

513


வருகின்றார்கள். பலரும் அரசுக்கு முறையீடு செய்து வருகின்றார்கள். ஏப்ரல் 1998 ஆம் ஆண்டு பால் கொள்முதல் விலை 7 ரூபாய் 51 காசிலிருந்து 9 ரூபாயாக உயர்த்தப்பட்டது. உங்களுக்கு ஞாபகம் இருக்கும். ஆனால் அதேநேரத்தில் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய்தான் உயர்த்தப் பட்டது. ரூ. 91/2-லிருந்து ரூ. 10/2 என்றுதான் உயர்த்தப்பட்டது. இதனை ஓரளவு ஈடுகட்டும் வகையில் அரசு உதவி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு அரசின் சார்பில் அதை ஈடுகட்ட 23 கோடி ரூபாய் வழங்கப்பட்டது, பால் உற்பத்தியாளர்களுக்கு அந்தப் பணம் போய்ச்சேருவதற்காக. ஆனால் ஆண்டுதோறும் தொடருகின்ற இழப்பாக இருக்கின்ற காரணத்தினால், இந்த ஆண்டும் பால் உற்பத்தியாளர்களுக்குச் சேரவேண்டிய தொகையை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த அவசியத்தை முன்னிட்டு அதைப்பற்றி யோசிக்க வேண்டும் என்று எண்ணியபோது டில்லியிலே நடைபெறுகின்ற, நாளைக்கு நாங்கள் செல்ல வேண்டிய அந்தக் கூட்டத்திற்கான முன் ஏற்பாடுகளைக் கவனிக்கவும், அங்குள்ள அமைச்சர்களோடும், அங்குள்ள Planning Commission அதிகாரிகளோடும் கலந்து பேசவும் நம்முடைய நிதித்துறைச்செயலாளர் அங்கு சென்றிருக்கின்ற காரணத்தால், அவர் திரும்பி வந்தவுடன், அதற்கான நல்ல வழி ஒன்று கண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு உதவி நிச்சயமாகச் செய்யப்படும் என்ற நம்பிக்கையை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

Å

ஒரு முக்கியச் செய்தியை இந்த மாமன்றத்திலே சொல்ல விரும்புகின்றேன். வளரும் நாடுகளில் 80 விழுக்காடு மக்கள் தங்கள் உடல்நலம் பேணுவதற்காக பாரம்பரிய மருந்துகளான மூலிகைச் செடி மருந்துகளையே நாடுகின்றார்கள் என உலக மக்கள் நல்வாழ்வு அமைப்பு (World Health Organisation) மதிப்பிட்டுள்ளது. பக்க விளைவுகளை ஏற்படுத்தாததாலும், எளிதில் கிடைப்பதாலும், ஏழை மக்களுக்குரிய ஒரே வழியாக விளங்குவதாலும், மூலிகைச் செடிகளின் தேவை அதிகரித்து வருகிறது. சீனத்தில் (China) மூலிகைகளின் வாணிபம் சுமார் இருபதாயிரம் கோடி ரூபாய்; ஆனால் இந்திய மூலிகைகளின் வாணிபம் வருடத்திற்கு சுமார் 450 கோடி ரூபாய்தான்