கலைஞரின் சட்டமன்ற உரைகள்
515
ஊராட்சி ஒன்றியங்களிலே உள்ள கல்வி நிதியில் இருந்து அந்தந்த ஒன்றியப் பள்ளிகளைப் பழுதுபார்ப்பது (Main- அ tenance) மட்டுமல்லாமல் மீதம் போதிய நிதி இருப்பின் தேவைக்கேற்ப பள்ளிக்கட்டடம் கட்டவும் ஊராட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும். ஊராட்சி ஒன்றியங்களின் பொது நிதியிலே போதிய நிதி இருப்பின் அந்த நிதியிலிருந்து சத்துணவுக் கூடக் கட்டடம் கட்டுவதற்கும், பழுது பார்ப்பதற்கும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
ய
வரிகளைப் பற்றி யாரும் பேசவில்லை. திரு. பெரியசாமி மாத்திரம்தான் பேசினார். தேங்காயைப்பற்றி திரு. சுந்தரம் பேசினார். ஆனால் நான் எல்லாம் சொல்லிவிட்டேன். நிதி வருவாய் எவ்வளவு இருக்கிறது என்று சொல்லிவிட்டேன். பற்றாக்குறை எவ்வளவு இருக்கிறது என்று சொல்லிவிட்டேன். எந்த அளவிற்குச் சிக்கனமாக இருக்கவேண்டி இருக்கிறது என்ற சூழ்நிலையையும் சொல்லிவிட்டேன். மத்திய சர்க்காருடைய ப பணத்தை எதிர்பார்த்துதான் இருக்கிறதைச் சரிசெய்து விட்டுப் போக முடியும். நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்பதையும் சொல்லிவிட்டேன். இதற்கிடையிலேயும்கூட, நாம் வரிச்சலுகை அளித்த அளவிற்கு இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் அளித்ததாகச் சொல்ல முடியாது. இந்த 4 ஆண்டு காலத்திலே அந்த அளவுக்கு வரிச்சலுகையை இந்த அரசு வழங்கியிருக்கின்றது? வணிகர்கள் நம்மை பாராட்டுகின்ற அளவுக்கு, வாழ்த்துகின்ற அளவுக்கு வரிச் சலுகை அளித்திருக்கிறது. சுலபமாக ஆக்கியிருக்கிறது விற்பனை வரியை சுலபமாகவும், எளிதாகவும் ஆக்கி அவர்களை மகிழச் செய்திருக்கிற அரசும் இந்த அரசு என்பதை யாரும் மறந்திட இயலாது.
த
2000-2001 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து சட்டமன்றப் பேரவையில் அளித்த பின்னர் விற்பனைவரிவிகிதங்களில் மேலும் சில பொருட் களுக்கு வரிக் குறைப்புச் செய்ய வேண்டுகோள்கள் சில வணிகச் சங்கங்களிலிருந்தும், வணிகவரித் துறையைச் சேர்ந்த மானியக் கோரிக்கையின்மீது நடைபெற்ற விவாதத்தின்போது சில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் வரப்பெற்றன. அந்த
4