பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

517


ம்


வேலூர் மாவட்டம், வாலாஜா, வாணியம்பாடி மற்றும் சேலம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கைத்தறித் தொழில் முறையில் தயாரிக்கப்படும் 'நிலக்கம்பளம்' பெருமளவில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளுக்கு ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் வெளிமாநில விற்பனை செய்யப் படுகிறது என்றும், அத்தகைய நிலக்கம்பளத்தின் மீதான விற்பனைக்கு முழு விற்பனை வரிவிலக்கு அளிக்கும்படி அரசுக்குப் பல கோரிக்கைகள் வந்துள்ளன.

நிலக்கம்பளம் உள்மாநிலத்தில் விற்கும்போது 20 விழுக்காடு வரிக்கு வரிக்கு உள்ளாகிறது. உள்ளாகிறது. இது இடைமாநில விற்பனையின்போது சி படிவம் தரப்பட்டால், நான்கு விழுக்காடு வரிக்கு உள்ளாகிறது. சி படிவம் தரப்படாத நேரத்தில் 20 விழுக்காடு மத்திய விற்பனை வரிக்கு உள்ளாகிறது. நிலக் கம்பளம் இடைமாநில விற்பனையின்போது சி படிவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான்கு விழுக்காடு விற்பனை வரி விதிக்கலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது. (மேசையைத் தட்டும் ஒலி).

6

ம்

நீலக்கீல் என்னும் தார் பூசப்பட்ட கூரைத் தகடுகள் (Asphalt Roofing Sheets) மீதான விற்பனை வரி 12 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது மேற்படி வரி விகிதக் குறைப்புகள் எல்லாம் 1-6-2000 முதல் நடைமுறைக்கு வரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

டி

வரிவிதிப்பு தொடரப்படும் முதல் மேல்முறையீட்டி லிருந்து தகராறுக்குட்பட்ட வரியில் 25 விழுக்காடு செலுத்தினால் மட்டுமே மேல்முறையீடு அனுமதிக்கப்படும் என்று தற்போது உள்ளது. அந்த விகிதம் 12.5 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது து. (மேசையைத் தட்டும் ஒலி)

சுயவரிவிதிப்பிற்கு

உச்சவரம்பு

20

ரூபாய் இலட்சத்திலிருந்து ரூபாய் ஒரு கோடியாக அதிகரிக்கப்பட்டு அத்தொகை வரை, மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள் அனைவரும் பதிவுபெற்ற பட்டயக் கணக்கர் (Chartered Accountant) தணிக்கைச் சான்றிதழ் பெற வேண்டும் என்று