பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது ரூபாய் 20 இலட்சம் வரை மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள் பதிவுபெற்ற பட்டயக் கணக்கர் தணிக்கைச் சான்றிதழ் தருவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

15.2

மகிழ்ச்சியோடு

தமிழ்நாடு பொது விற்பனை வரிச்சட்டம், மூன்றாம் அட்டவணையில் பகுதி பி-யில் இனம் 81-ல் குறிப்பிட்டுள்ள பருப்பு வகைகள் மீதான வரி விலக்கு வரம்பு 100 கோடி ரூபாய் என்பது, ரூபாய் 300 கோடியாக 17-7-1996 முதல் முன்தேதியிட்டு உயர்த்தப்படுகிறது.

சமையல் எண்ணெய் மீதான தற்போதுள்ள வரி விலக்கு உச்சவரம்பு ரூபாய் 100 கோடியிலிருந்து ரூபாய் 300 கோடியாக 1-3-1999 முதல் முன்தேதியிட்டு உயர்த்தப்படுகிறது.

தற்போது பிரிவு 7(சி)-ன் கீழ், ஒப்பந்தக்காரர்கள் நிதியாண்டு அடிப்படையில் இணக்க வரி செலுத்தலாம். இதனை நிதியாண்டு அடிப்படையில் அல்லாது ஒப்பந்தப்பணிகள் வாரியாகவும் இணக்கவரி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு மகிழ்ச்சியான செய்தி, மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு. ராம்ஜெத்மலானி அவர்களுக்கு 3-5-2000 அன்று ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் கம்பெனி சட்ட ஆணையத்தின் முதன்மை Bench (Principal Bench of Com- pany Law Board) சென்னையிலே அமைக்கவேண்டுமென்ற தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தேன், இது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து அமைய வேண்டிய முதன்மை Bench ஆகும். தொடர்ந்து மத்திய வர்த்தக, தொழில் அமைச்சர் திரு. முரசொலி மாறனுக்கும், மத்திய சட்ட அமைச்சரை இதுகுறித்து நேரில் சந்தித்து வலியுறுத்துமாறு அறிவுறுத்தியிருந்தேன். என்னுடைய கடிதத்திற்கு இணங்கவும், திரு. மாறன் வலியுறுத்தலுக்கு இணங்கவும், மத்திய சட்டத்துறை ய அமைச்சர் திரு. ராம்ஜெத்மலானி அவர்கள் நமது வேண்டு கோளையேற்று கம்பெனி சட்ட ஆணைய முதன்மை Bench-ஐ

துப