பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

519


(Principal Bench of Company Law Board) சென்னையிலே நிறுவுவதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் (மேசையைத் தட்டும் ஒலி) என்ற மகிழ்ச்சிகரமான செய்தி காலையிலேதான் கிடைத்தது. அதை தமிழகத்திற்கும், இந்த அவைக்கும் அறிவித்துக்கொள்கிறேன். மேலும் நமது வேண்டுகோளை ஏற்று இதனை சென்னையிலே அமைக்க முன்வந்த மத்திய அமைச்சர் ராம்ஜெத்மலானி அவர்களுக்கும் தமிழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

இறுதியாக, தமிழகத்தினுடைய நிலவரம், வளம் குறித்து Associated Chambers of Commerce and Industry, Study on Yields என்ற ஒரு கருத்து Business Line என்கின்ற பிரபலமான ஆங்கில ஏட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது அந்த ஏட்டின் கருத்தல்ல. Associated Chambers of Commerce and Industry Study-யினுடைய அந்தக் கருத்தே - அந்தக் கட்டுரையின் தலைப்பே, அந்தக் கருத்துரைக்குத் தலைப்பு -

TAMIL NADU TOPS IN OILSEEDS

While Punjab continues to lead in the yield rate of wheat, its pre-eminent position in the productivity of rice has been displaced by Tamil Nadu according to a study by the Associated Chambers of Commerce and Industry. The analysis reveals that Haryana too has slipped from its top position in oilseeds yield with Tamil Nadu emerging ahead of both Haryana and Orissa. Tamil Nadu in 1998-99 had a triple distinction - being the number one State in India in terms of yield rates of rice, sugarcane and oilseeds.

அதாவது, தமிழ்நாட்டிற்கு முதல் இடம் என்கிற தலைப்பு. பஞ்சாப் மாநிலம் கோதுமை உற்பத்தித் திறனில் தொடர்ந்து முன்னணியில் இருந்தாலும், அரிசி உற்பத்தியில் பஞ்சாப் மாநிலம் இதுவரை தக்கவைத்துக்கொண்டு இருந்த தனிச் சிறப்பை, அந்த நிலையை தமிழ்நாடு மாற்றி, முதல் இடத்திற்கு வந்துவிட்டது. (மேசையைத் தட்டும் ஒலி) இதனை Associated