கலைஞரின் சட்டமன்ற உரைகள்
521
உரை : 62
முதல் துணை மதிப்பீடு
நாள்: 13.11.2000
கு
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, 2000-2001-ஆம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளில், கருத்துக்களை எடுத்துச்சொன்ன மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நன்றி கூறிக்கொள்கின்றேன்.
561.52 கோடி ரூபாய்க்கான துணை மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதற்காக, மின் வாரியத்திற்குக் கூடுதல் மின் கட்டண இழப்பீட்டுத் தொகையாக 319.43 கோடி ரூபாயும், சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 60 இலட்சத்திலிருந்து ரூ. 77 இலட்சமாக உயர்த்திய வகையில், 63.45 கோடி ரூபாயும், பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கிட 30 கோடி ரூபாயும், விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்காக 20 கோடி ரூபாயும், 960 தொடக்கப்பள்ளிக் கட்டடங்களைக் கட்டுவதற்கு மாநில அரசின் பங்குத் தொகையாக, மொத்த 29 கோடி ரூபாயில், 17.99 கோடி ரூபாயும், அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் நகராட்சிகளுக்கு மானியமாக 7 கோடி ரூபாயும், ஆக இந்தத் துணை மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. நமக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சங்கடம் என்று ஒன்று சொல்லவேண்டுமேயானால், அண்மையில் 11-ஆவது நிதிக்குழு அறிக்கை, ஜூலை 2000-லே தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களுக்கு மைய அரசின் அனைத்து நிகர வரி வருவாயில் 29.5 விழுக்காடுகள் பகிர்ந்து அளிக்கப்படும் என்ற நிலையில் தமிழ்நாட்டினுடைய பங்கு 5.385 விழுக்காடு என்று இருந்தது. இது பத்தாவது நிதிக் குழுவிலே 6.637 விழுக்காடாக இருந்தது என்பதை ஒப்பிட்டு நோக்கும்போது, தமிழகத்திற்கு இதனால் 2000-2001-லே இருந்து, ஐந்தாண்டுகளில் சுமார் 4,700 கோடி ரூபாய் இழப்பு