பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


ம்ம

6

து

ஏற்படும் என்கின்ற கவலை நமக்கு ஏற்பட்டு, இதுகுறித்து பிரதமரிடத்திலும் மற்றும் மத்திய நிதியமைச்சரிடத்திலும் மற்ற அமைச்சர்களிடத்திலும் முறையிட்டு, வலியுறுத்தி எடுத்துக் கூறியதன்பேரில், வேறுவிதமாக இதைச் சமாளிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நேரம் அதிகம் இல்லை என்ற காரணத்தினால், சில முக்கியமான செய்திகளை மாத்திரம் இங்கே அறிவிக்க விரும்புகின்றேன். பல உறுப்பினர்களும் தந்துள்ள பல கருத்துக்களைப் பற்றி விரிவாகப் பின்னர் பேசலாம் என்பதையும் அவை அதிகாரிகளினுடைய கவனத்திற்கு நிச்சயமாக எடுத்துச் செல்லப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் நான் இங்கே கூறிக்கொள்கின்றேன்.

ஏதோ, மதுரையிலே பஸ்கள் எரிக்கப்பட்டன. குடும்பச் சண்டை என்று சொன்னார்கள். எல்லாக் கட்சிகளிலும் குடும்பச் சண்டை இருக்கிறது. இது நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் அவர்களுக்குத் தெரியாததல்ல. குடும்பச் சண்டைகளின் காரணமாக, யார், யார் எங்கெங்கெல்லாம் இருந்து பிரிந்துபோய் விட்டார்கள் என்பதெல்லாம்கூட நமக்கு நன்றாகத் தெரியும். இதையெல்லாம் விவரித்து விவகாரமாக ஆக்கிக் கொள்ள நாம் விரும்பவில்லை. குடும்பச் சண்டை அல்ல; கட்சிச் சண்டைதான். கட்சியா. குடும்பமா என்று இருந்தால், நான் கட்சியைத்தான் பெரிதாக மதிப்பவன்; குடும்பத்தை அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) கட்சியைப் பெரிதாக மதித்து, குடும்பத்தைப் பெரிதாக மதிக்காத காரணத்தால்தான் 8 பேர் இன்றைக்குத் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மதுரை சிறைச்சாலையிலே அடைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நான் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

சில செய்திகளை இங்கே அறிவிக்க விரும்புகிறேன். சென்னை மாநகரத்திலே உள்ள கூவம். அடையாறு பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி வடிகால், கேப்டன் காட்டன் கால்வாய் ஆகிய 5 நீர்வழிகளில் சேரும் திடக்கழிவு தடுப்பு, கழிவு நீர் அகற்றும்