பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

523


மற்றும் சுத்திகரிப்பு ஆகிய பணிகளுக்காக மைய அரசு தேசிய நதி நீர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், 491 கோடி ரூபாய் மானியமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என்பதை இங்கே நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) Accepted in principle. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலேயிருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து, முறையே காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகள் மாசுபடுவதை தடுக்கும் எண்ணத்தோடு 335.38 கோடி ரூபாய் அளவில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மைய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்தத் திட்டங்களுக்கும் மைய அரசின் நிதி உதவி எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயத் தொழிலாளர்களின் ஏழ்மை நிலையை மனதிலே கொண்டு, அவர்களுக்கென தனியாக ஒரு நல வாரியம் அமைக்கக் கோலப்பன் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்காக விவசாயத் தொழிலாளர்களையும் Tamil Nadu Manual Workers (Regulation of Employment and Conditions of Work) Act 1982 என்ற சட்டத்தின்கீழ் இணைத்து, அதற்கான அறிக்கையும் தமிழ்நாடு அரசிதழில் 14-8-2000 அன்று பிரசுரம் ஆகியுள்ளது. அந்த அறிக்கையின் சட்டப்பூர்வமான மூன்று மாத கால அவகாசம் அ இன்றோடு முடிவடைகிறது. எனவே விரைவில் விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பெறும் என்ற மகிழ்ச்சி கரமான செய்தியை இங்கே நான் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

இதுவரையில் கழக அரசால் அமைக்கப்பட்ட வாரியங்கள், அமைப்புச் சாராத தொழிலாளர்கள் பாதுகாப்பு வாரியங்கள், தனித்தனியாக சில வாரியங்கள். ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நல வாரியம். தமிழ்நாடு முடிதிருத்துவோர் நல வாரியம், தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியம், இன்று அறிவித்துள்ள விவசாயத் தொழிலாளர் நல வாரியம், மண்பாண்டம் புனைவோருடைய நல வாரியம் தேவை என்றும் எனக்குக் கடிதங்கள் எழுதி உள்ளார்கள். அதுபற்றியும் விரைவிலே கவனித்து ஆவன செய்யப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.