பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


நடப்பாண்டில் நபார்டு வங்கி அளிக்கும் ஊரகக் கட்டமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து உதவி பெற்று 122.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1102 கிலோமீட்டர் நீளத்திற்கு 440 சாலைகளும், 81 சிறு பாலங்களும் அனைத்து மாவட்டங்களில் ஊரகப் பகுதியிலே அமைக்கப்படும் என்பதையும் அறிவிக்கின்றேன்.

518

மதுரை மாநகரில் வைகை நதியின் இரண்டு பக்கக் கரைகளில் வெள்ளத்தடுப்புச்சுவர் எழுப்புவதற்கும், கரை யோரங்களில், உள்ளாட்சிச் சாலைகளை மேம்படுத்துவதற்கும் 18 வாய்க்கால்களைத் தூர்வாரி முறைப்படுத்தி, கரையோரங்களில், தோட்டங்கள் மற்றும் பூச்செடிகள் அமைப்பதற்கும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் அரசின் பங்காக, ரூ. 6 கோடி அனுமதிக்கும். இத்திட்டத்தில் பொதுமக்கள் இரண்டு கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு இம் மாமன்றத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

கு

தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள்மீது சுமார் 2150 தண்டனைப் பட்டியல்கள் நிலுவையிலே உள்ளன. இவற்றில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் காவல்துறை நிலை ஆணை விதி 145-ன்கீழ் விசாரணை, அல்லது கிரிமினல் குற்றச்சாட்டு சம்பந்தப்பட்டவை சுமார் 600 ஆகும். மீதமுள்ள 1550 தண்டனைப் பட்டியல்கள். சிறு தவறுகளுக்காக ஏற்படுத்தப் பட்டவை. இதன் காரணமாக பல காவலர்கள் பதவி உயர்வு பெற இயலாத நிலை உள்ளது. இந்நிலையைப் போக்க சிறு தவறுகளுக்காக நிலுவையிலே உள்ள 1550 தண்டனைப் பட்டியல்களை, உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று பரிசீலித்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இரண்டு மாத காலத்திற்குள் தண்டனைப் பட்டியல் மீதான மேல் நடவடிக்கை கைவிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

குறைந்தது 10 ஆண்டு பணியிலிருந்து எந்த தண்டனையும் பெறாமல் பணியாற்றியிருக்கின்ற காவலர்கள். தலைமைக் காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரின் காவல் துறை பதக்கம், அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி வழங்கப்படுகிறது. சிறு தவறுகளுக்காக துறை நடவடிக்கையினால், தண்டனை பெற்ற சிலர், தண்டனைக்குப்