பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


அடிப்படையில் ஒரே மாதிரியான (Flat Rate) தண்ணீர்த் தீர்வை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி) அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவின் காரணமாக, கீழ்பவானி ஆயக்கட்டுதாரர்கள் எதிர்கொண்டுவரும் நீண்டகாலப் பிரச்சினைக்கு நல்லத் தீர்வு காணப்பட்டுள்ளது.

6

11-5-2000 அன்று சட்டமன்றத்தில் ஒரு வெள்ளை அறிக்கை வைக்கப்பட்டு, மொத்தப் பின்னடைவு பணியிடங் களாகிய 11,264-ஐ படிப்படியாக 5 ஆண்டுகளுக்குள் நிரப்பப்படும் என்று உறுதி அளித்தேன். அதன் அடிப்படையில் முதலாவது ஆண்டில் அதாவது 2000-2001ஆம் ஆண்டில் நிரப்பப்படுவதற்காக குறியீடு செய்யப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 2,250 ஆகும். இந்தப் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச்செயலாளர், ஆதிதிராவிடர் நலத் துறைச் செயலாளர் பிற்படுத்தப்பட்டோர்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைச் செயலாளர் ஆகியோரைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆய்வு செய்து 31-10-2000 வரை நிரப்பப்பட்ட பணியிடங்கள் 828 ஆகும். இது தவிர, 61 பணியிடங்களுக்குத் தகுந்த நபர்களைத் தேர்ந்தெடுக்க நியமன நிறுவனங்களாகிய தேர்வு ஆணையம் மற்றும் வாரியங்கள் அறிவிப்பை செய்துள்ளன. இவ்வாண்டிற்கு நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களின் குறியீட்டில் இதுவரை நிரப்பப்பட்டுள்ள குறியீடு 39.5 விழுக்காடு ஆகும். டிசம்பர் 2000-த்திற்குள் இந்த வருடாந்திரக் குறியீடு 2250 காலிப் பணியிடங்கள் முழுவதுமாக நிரப்பப்பட தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட குறியீடு முழுவதும் நிரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியோடு டு தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி, நிரப்பப்பட்ட பணியிடங்கள் வகுப்புவாரியாக பின்வருமாறு :

மொத்த நிரப்பப்பட்ட பணியிடங்கள் இதுவரையில் 828. அதிலே ஆதிதிராவிடர்கள் 387. பழங்குடியினர் 4. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 437 என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.