கலைஞரின் சட்டமன்ற உரைகள்
527
நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தொழில் துறையிலே தொழில் முதலீட்டில் முதலிடத்திலே இருப்பதைப் பற்றி நான் சொன்னது தவறாகிவிட்டது என்று குறிப்பிட்டார்கள். மராட்டியத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் - நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஒரு முதலிடம், இரண்டாவது இடம் என்பதிலே எப்போதும் ஒரு அணு அளவு வித்தியாசம் இரண்டுக்கும் இடையிலே எப்போதும் இருப்பதுண்டு. அந்த வித்தியாசத்தைத்தான் அந்தப் பத்திரிகை வெளியிட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.
3ல்
2002405
சி.எம்.ஐ.இ. நிறுவனம் மாதந்தோறும் மாநிலங்களில் முதலீட்டு நிலைமைகளைப்பற்றி அறிக்கை வெளியிடுகிறது அந்தந்த மாதத்தில் எடுக்கப்படும் முதலீடுகளைப் பற்றிய முடிவுகளைப்பற்றி மாநிலங்களின் ஒப்பீடு நிலையில் மாறுதல் ஏற்படும். ஆகஸ்ட் மாதத்தில் சி.எம்.ஐ.இ.-ன் அறிக்கைப்படி தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. சமீபத்திய அறிக்கைப்படி தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பதை நான் இங்கே விளக்கமாக அறிவிப்பதோடு, இன்னொரு முக்கியமான அறிவிப்பை - இந்த அரசின் சார்பில் பல நல்ல தமிழ் அறிஞர் களுடைய நூல்களையெல்லாம் நாட்டுடமை ஆக்குகின்ற காரியத்தைத் தொடர்ந்து செய்துவருகின்றோம். அதிலே கடந்த வரவு-செலவுத் திட்ட உரையின்போது பலருடைய நூல்கள் அரசுடமை ஆக்கப்பட்டதை அறிவித்து அதற்குரிய நிதி அவர் களுடைய குடும்பத்தாருக்குப் பரிவுத்தொகை; அண்மையிலே வழங்கப்பட்டிருக்கிறது. அதிலே விடுபட்டுப்போன ஒன்று அதை வருத்தத்தோடு தெரிவித்து, ஆனால் மகிழ்ச்சியோடு பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் அவர்களுடைய புத்தகங்கள் அரசுடமையாக ஆக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) அதற்குரிய பரிவுத்தொகையும் மற்றவர்களுக்கு வழங்கப் பட்டதைப்போல வழங்கப்படும் என்பதையும் தெரிவித்து இந்த அளவில் அமைகின்றேன் நன்றி.