பக்கம்:மாபாரதம்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

வழிகாட்டுவன ஆகும். (1) சூது தீது; (2) தாயவழக்குகள் அழிவைத்தரும்; (3) பெண்ணடிமை கூடாது; (4) தவறுகள் வாழ்க்கைக்குத் தடை இல்லை என்பது போன்ற கருத்துகள் உள்ளன. கதையின் கருவே பாஞ்சாலி சபதம்தான்; எனினும் அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதை பாரதம் காட்டுகிறது. தருமம் நம் பக்கம் இருந்தால் மட்டும் வெற்றி காண முடியாது. செயலாற்றும் திறனும், திட்டமிடும் அறிவும் தேவை என்பதை வலியுறுத்துகிறது. நல்லவனாகவும் வல்லவனாகவும் மட்டும் இருந்தால்போதாது; அறிவு உடையவனாகவும் இருக்க வேண்டும் என்ற மூன்றாவது தத்துவத்தை உணர்த்துகிறது. அதனால் இது மிகவும் பயனுடைய நூலாகும்.

இதனை உரைநடையாக எழுதும் போது ஓர் அரிய சாதனையைச் செய்யவேண்டும் என்று முயன்றேன். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியாகப் பணியாற்றும் போது கிடைத்த அறிவும் அனுபவமும் பெரிதும் பயன்பட்டன. 1981ல் ஒய்வு பெற்றேன். அண்மையில் இரண்டு ஆண்டுகளாக இவற்றை எழுதும் முயற்சியில் ஈடுபட்டேன். ஏட்டில் படித்தவர்கள் இவை பயன் உடையவை என்று எடுத்துக் காட்டினர்.

தமிழ் மாணவனாகத் தொடங்கி ஆசிரியப் பணியும் ஏற்று யான் ஆய்வு நூல்களையும் படைப்பு நூல்களையும் ஒரு சில வெளியிட்டிருக்கிறேன். எழுத்தில் தமிழ் இயல் அமைக்க முடிந்தது. இதை விமரிசனம் செய்யும் உரிமை எனக்கு இல்லை; வாசகர்க்கே உண்டு. புதுக்கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் நா. பாண்டுரங்கம் அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன் என்னை ஊக்குவித்தார். "உம்முடைய நடை எளிமையும் எழிலும் கொண்டது; அதைப் பயன்படுத்தித் தொடர்ந்து எழுத வேண்டும்" என்றார். அவ் ஊக்கம் என்னைக் கெளரவித்தது; ஆக்க பூர்வமான பணி செய்துள்ள மன நிறைவோடு இந்நூலை வெளியிடுகின்றேன்.

ரா. சீனிவாசன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/10&oldid=1239386" இலிருந்து மீள்விக்கப்பட்டது