பக்கம்:மாபாரதம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

102


சிசுபாலன் வதம்

சராசந்தன் அழிந்தான். அதற்கு அடுத்து சிசுபாலன் அழிவு காத்துக் கிடந்தது; வாய்க் கொழுப்பால் அழிந்தவர்களில் இவன் வரலாறு முதல் இடம் பெறுகிறது.

இராசசூய யாக முயற்சிகள் தொடர்ந்து மேற் கொள்ளப் பட்டன. நாற்றிசையும் பாண்டவர்களும் அவர்கள் மக்களும் சென்று முரண்பாடு கொண்டவரின் படைகளை அழித்தும், அடிபணிந்தவர்களிடம் திறை பெற்றும் நவ மணிகளையும் நவநிதிகளையும் கொண்டு வந்து குவித்தனர். வீமன் கீழ்த்திசையும், சகாதேவன் தென்றல் வரும் தென்திசையும் சென்றனர்; பகைவர்களை வென்று பார் புகழத்தம் வெற்றிக் கொடிகளை நிலைநாட்டினர். சிங்களத் தீவுக்கு இடிம்பியின் மகன் கடோற்சகன் சென்று வீடணனின் வழித் தோன்றல்களைச் சந்தித்து வேண்டியதைப் பெற்று வந்து குவித்தான். சென்ற இடம் எல்லாம் வெற்றி தவிர வேறொன்றையும் கண்டிலர். தடுப்பார் இன்றி அடுபகை வென்று பீடும் பெருமையும் பெற்று ஈடு இணையற்றவராகத் திரும்பிவந்தனர்.

பொருளும் பொன்னும் மருளும் வகையில் வந்து குவிந்தன. வேள்வி நடத்தும் நாளைக் கோள் நூல்வல் லோர் குறித்துத் தந்தனர். இராசசூய யாக வேள்விக்கு நாணிவ மன்னர்களும் அழைக்கப்பட்டனர். நாரத முனி வனை அனுப்பி நாரணன் ஆகிய கண்ணபெருமானை அழைத்து வரச் செய்தனர். பராசன் மகனாகிய வியாச னும் வந்திருத்தான். அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு நிலை ஏற்பட்டது.

பாரதக்கதையே தவறுகளை மிகைப்படுத்தக்கூடாது என்ற உட்பொருளைக் கொண்டதாக விளங்குகிறது. தவறு செய்து விட்டால் அதற்கு மனம் வருந்தித் தன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/104&oldid=1036108" இலிருந்து மீள்விக்கப்பட்டது