பக்கம்:மாபாரதம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

மாபாரதம்

அழித்துக் கொள்ளும் அவலநிலை மானிடர்களுக்கு ஏற்படுகிறது; அது தேவை இல்லை, மனிதன் குறையுடையவன்; தவறுகள் நிகழலாம். அதற்காக யாரும் தம்மை அழித்துக் கொள்ளத் தேவையில்லை என்பது பாரதம் தரும் பாடம்.

பாஞ்சாலி பாண்டவர் ஐவர்க்கும் பத்தினி என ஏற்கப்பட்டாள்; நாரதன் இடையில் ஒரு திருத்தம் கொண்டு வந்தான். எந்த ஒற்றுமையின் காரணமாக ஐவரும் உவந்து ஒருத்தியை மணந்தார்களோ அதன் விளைவால் ஐவருக்கும் ஒற்றுமை சிதைவதற்கும் வழி உண்டு என்பதை நாரதன் உணர்த்தி ஆண்டுக்கு ஒருவர் கணவராக முறை வைத்துக் கொள்வது தக்கது என்று அறிவித்தான். அதற்கு மேல் ஒரு படி வியாசன் அமைத்துத் தருகிறான்.

அவள் யாகபத்தினியாகிய பிறகு அவள் வாழ்க்கை தனிப்பட்டது ஆகிறது. மேடையில் தருமனும் திரெளபதியும் அமர்கின்றனர். அதனால் கணவன் மனைவி என்ற பெருமை அவர்களுக்கே உரிமை ஆகிறது. அவர்கள் தலைமை பெறுகிறார்கள்; மற்றவர்கள் அவர்களை மதித்து வாழும் மனநிலை பெற வேண்டும் என்று கூறி வியாசன் மாற்றுகிறான். தாயும் தந்தையுமாக அவர்கள் போற்றி மதிக்கத்தக்கவர்கள் என்று புதிய திருப்பத்தை உண்டு பண்ணுகிறான். தம்பியரும் அதனை அமைதியாக ஏற்றுக் கொள்கின்றனர். தவறுகள் வாழ்க்கைக்குத் தடையாகக் கூடாது என்பது பாரதம் கற்பிக்கும் பாடமாகும், குந்தி கதிரவனால் கன்னனைப் பெற்றாள். அதனால் அவள் மணவாழ்வுக்குத் தகுதி அற்றவள் என்று ஒதுக்கப்பட வில்லை.

வேள்விக்கு உரிய தலைமை தருமனைச் சார்ந்தது; திரெளபதி யாகபத்தினியாக மாறினாள்; அவள் நிலை உயர்த்தப்பட்டது. ஆரம்பத்தில் அவர்கள் வாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/105&oldid=1036110" இலிருந்து மீள்விக்கப்பட்டது