பக்கம்:மாபாரதம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

105


“இவன் தந்தையும் தாயும் சிறைக் கைதிகள் என்பதை மறுக்க முடியுமா?”

“பிறப்பு என்பதிலும் சிறப்பு இல்லை; வளர்ப்பில்” என்ன உயர்வு கண்டான்?”

“ஏழை ஆய்ச்சியர் எட்டாத உயரத்தில் உறிகளில் வைத்த தயிர் பால் வெண்ணெயைத் திருடித் தின்றான். கொள்ளை அடிப்பதில் கூட்டுச் சேர்த்துக்கொண்டு ஆயர் சிறுவர்களையும் கள்ளத்தனம் செய்யத் துணை தேடினான்.”

“பெண்கள் தெருவில் அச்சமின்றி நடக்க முடிந்ததா? பேதைச் சிறுமியர்கள் பின்னல்களைப் பின்னால் இருந்து இழுத்துச் சிறு குறும்புகள் செய்து அவர்கள் தன்னை விரும்புமாறு நடந்துகொண்டான். கூந்தலில் பூ வைக்க ஆசை உண்டா? அவன் கை வைத்து இழுப்பது எப்படி நியாயம் ஆகும்?”

“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவள வாய் தான் தித்தித்திருக்குமோ என்று அவன் வாய்ச்சொற் களுக்கு அவர்களை ஏங்கித் தவிக்குமாறு செய்தான். உரலில் கட்டி வைத்தால் அதன் உயரம் கெட அதை இழுத்துச் சென்று மரங்களிடை மோத வைத்து அம்மரங்களையே சாய்த்துவிட்டான். பாலைத் தர வந்த தாய் பூதகியைப் பாலைப் பருகாமல் காதகி என்று காட்ட அவளின் உயிரையே பருகி விட்டானே! இவன் கொடுமைக்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு ஆகும்.”

“குளித்துக் கரை ஏறக் காத்திருந்த கன்னியரின் சேலைகளை ஒளித்து வைத்து அவர்கள் நாணத்தின் கரையை ஏறும்படி செய்தவன்தானே! இது அவன் வாழ்க்கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/108&oldid=1036544" இலிருந்து மீள்விக்கப்பட்டது