பக்கம்:மாபாரதம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மாபாரதம்

ஏற்பட்ட கறையாகாதோ? அசுரர்களை அடையாளம் கண்டு கன்று என்றும் கருதாமல் விளாமரம் என்றும் கொள்ளாமல் மோத வைத்து அவர்களைச் சாடி வதைத் தானே! இது எப்படி நியாயம் ஆகும்? மாமனை மரியாதையாக நடத்த வேண்டிய அவன் அவன் மார்பில் ஏறி வீமனைப் போலக் குத்திக் கொன்றானே இஃது எப்படி அடுக்கும்? பாம்பைக் கண்டு நடுங்க வேண்டிய ஒருவன் அதில் ஏறி நர்த்தனம் செய்தானே இதை யாராவது செய்வார்களா? மழை வந்தால் குடை பிடிக்காமல் அதற் காக ஒரு மலையையே தூக்கிப் பிடிப்பது இயற்கையை அதிரவைப்பது ஆகாதோ? குழல்ஊதிப் பசுக்களை அழைக் கலாம். அதைக் கொண்டு கோபியரை எப்படி அவன் மயக்கலாம்?”

“நாட்டிலே கண்ணனின் புகழிலே மயங்கிய நாட்டியக் கலையே அவனைச் சுற்றி இயங்குகிறது அவனால் பாட்டியல் கலைக்கும் நாட்டியக் கலைக்கும் இழுக்கு உண்டாகிறது அல்லவா? கருப்பு நிறத்தில் பிறந்தும் கன்னியரை விருப்புக்கொள்ளுமாறு மயக்கினான் என்றால் அதனை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? உறவு முறையால் உருக்கு என்ற பெண்மணியை எனக்கு என்று நிச்சயித்த நிலையில் இவன் அவள் நெஞ்சை உருக்கி அவன் பின் அவளை இழுத்து மணம் செய்து கொண்டது எப் படிப் பொருந்தும்? அவனைத் தலைமைக்குத் தகுதியாக்கினால் பாண்டவர் சகாயனாக இறுதி வரை நின்று பாடு படுவான். அதனால் துரியன் நூறுபேர் வேறாகப் பிரிக்கப் படுவர் அறிவு சான்ற துரோன ன் கிருபன் முதலிய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். உறவு சான்ற விடுமன், விதுரன் முதலியவர்களும் இருக்கிறார்கள். கண்ணிழந்து இவர்கள் வாழ்வுக்காக மண் மகிழ ஆளும் உத்தமன் திருதராட்டிரன் இருக்கிறான். இவர்களை எல்லாம் விட்டுவிட்டு இந்தச் சாமான்ய மக்கள் தலைவன் சாமள வண்ணனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/109&oldid=1048183" இலிருந்து மீள்விக்கப்பட்டது