பக்கம்:மாபாரதம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இறைவணக்கம்

ஞானம் ஆகிய பரம்பர அமிழ்தமாய்த் தவிரறு மயக்காகி
வானமாய் உடன் வாயுவாய்த் தேயுவாய் வனமுமாய் மண்ணாகித்
தான மாமறை முறைமையிற் பற்பல சராசரங்களும் ஆகி
ஏனமாய் இவை அனைத்தையும் மருப்பினால் ஏந்தினான் எனையாண்டோன்.

-வில்லிபுத்துரார்

ஞானமாகிய பரம் பொருள்; அவன் அமுதம் அனையவன்; மயக்கும் பொருளுமானவன், வானம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய ஐம்பெரும் பூதமாக விளங்குபவன்; வேதம் நுவலும் சராசரப் பொருள்கள் அனைத்துமாக விளங்குபவன்; கூர்ம அவதாரத்தில் பன்றியாகத் தோன்றித் தன் மருப்பினால் உலகை ஏந்திக் காத்தவன்; அத்திருமால் என்னை அடிமை கொண்டு ஆளும் தெய்வம் ஆவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/11&oldid=1239387" இலிருந்து மீள்விக்கப்பட்டது