பக்கம்:மாபாரதம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

107

எப்படி முதல் மரியாதைக்கு உரியவன் என்று பேச முடிந் தது என்று ஏசிக்கொண்டே சென்றான்.

பொறுமைக்கு உரிய பூமி சில சமயம் எரிமலையையும் கக்குகிறது. சலனமற்ற கடலில் புயல் வீகி அலைகளை எழுப்புகிறது. அதே போல்தான் கண்ணனும் பொறுத்துப் பார்த்தான். நூறு பிழை வரை காத்திருந்தான். நூற்று ஒன்று எட்டிப் பிடிக்கிறது. சென்சுயரி அடித்ததும் கர கோஷம் எழுவது இயற்கை; இங்கே நூறு எட்டியதும் அவன் சிரச்சேதம் ஏற்பட்டது. கண்ணனின் கையாழி சதிர் ஆடியது. கதிர் எனச் சென்று அவன் தலையைத் தனிப்படுத்தியது.

இராச சூய யாகம் இரண்டு கொடியவர்களின் உயிரை வாங்கியது: ஒன்று சராசந்தன்; மற்றொருவன் சிசுபாலன். கண்ணனின் காதல் விளையாட்டுக்களைக் கேட்ட உலகம் அவன் வீர விளையாட்டைக் காண முடிந்தது. அதற்குச் சிசுபாலன் வாய்ப்பளித்தான்.

தவறு செய்தவனை ஏன் உடனே தண்டிக்கக் கூடாது என்ற கேள்வி எழும்புவது இயற்கை தான்; உடனுக்குடன் தண்டிப்பதில் பொருளே இல்லாமல் போய் விடுகிறது; அதற்குத் தண்டனை என்ற பெயரே வழங்குவதில்லை. கொலை செய்தவன் தலை வாங்குவதாக இருந்தாலும் வழக்கு மன்றத்தில் விசாரித்துப் பின் தான் தண்டனை தரப்படுகிறது. அதே போலத்தான் கண்ணனும் தப்புகள் முழுவதும் செய்ய விட்டுப் பின் தண்டித்தான் என்று தெரி கிறது. முளையிலே களையாமல் முள் மரத்தை முற்றிய பிறகு களைந்தது ஏன்? என்ற அய்யத்துக்கு விடை கிடைத்தது. வியாசன் எழுந்தான்; அதன் காரணங்களை விளக்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/110&oldid=1036546" இலிருந்து மீள்விக்கப்பட்டது