பக்கம்:மாபாரதம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

111


இருவருக்கும் மற்றொரு போட்டி ஏற்பட்டு இருந்தது என்று விளக்கப்பட்டது.

“விதர்ப்ப தேசத்து அரசன் பீஷ்மகன் என்பவன் தன் மகளைக் கண்ணனுக்குத் தர விரும்பினான்; அவளும் அவனையே மணப்பது என்று உறுதி கொண்டிருந்தாள்! அவன் தமையன் ருக்குமன் என்பவன் அவளைச் சிசுபால னுக்குக் கட்டி வைக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தி ருந்தான். மண நாள் அன்று அவள் தப்பித்துக் கொள்ள விரும்பினாள். கண்ணனும் அவள் உள்ளம் தன்பால் என்பது அறிந்து தேர் கொண்டு அவளை ஏற்றிக் கொண்டு சென்று விட்டான். சிசுபாலன் ஏமாற்றம் அடைந்தான். அந்தப் பகையும் சிசுபாலனின் கோபத்துக் குக் காரணமாக இருந்தது என்று கூறப்பட்டது.”

சிசுபாலன் வாழ்வு முடிந்தது. கண்ணன் முதல் மரி யாதை பெறுவதற்கும் தலைமை ஏற்பதற்கும் எந்தத்தடை யும் ஏற்படவில்லை.

கண்ணனுக்குச் சிறப்பு வழிபாடும் பூசனையும் நடந் தன. தருமனும் திரெளபதியும் அவன் கால் தொட்டு வணங்கினர். வேள்வித் தீயின் முன் சாத்திரம் கற்ற ஆசான் மந்திரம் சொல்லத் தூய ஆடைகள் உடுத்திக் கொண்டு வேய்ங்குழல் கண்ணனின் வாழ்த்தோடு வேள் வித் தவிசில் உமையொரு பாகனைப் போல இடம் மாறி அமர்ந்தனர். வலம் மடவாளும் இடம் மணாளனும் ஆக அததவிசில் இருந்தனர். இது ஒரு மணவிழாப்போல வாழ்த்தொலியோடு நடைபெற்றது

வந்த விருந்தினரை வரவேற்று உபசரித்துப் பாக்கும் வெற்றிலையும் தரும் பணி பற்குணனிடமும், வீமனிடமும் நம்பி ஒப்புவிக்கப்பட்டன. ஈகை என்பதற்கு வாகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/114&oldid=1036556" இலிருந்து மீள்விக்கப்பட்டது