பக்கம்:மாபாரதம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

மாபாரதம்

சூடிய கன்னனிடம் ஈதல் பொறுப்பு ஒப்புவிக்கப்பட்டது. கொடுத்துச் சிவந்தகைகள் அவனுடையவை; இல்லைஎன்ற சொல்லுக்கு அவன் அகராதியில் இடம் இல்லை. அதே போலக் கணக்கு வழக்கு, பொருள் காப்பு ஆகிய பொருளாளர் பதவி செல்வக் கோமான் என்பதால் அரவு உயர்த்தோன் ஆகிய துரியனிடம் ஒப்புவிக்கப்பட்டது.

குரு குலத்துக்குப் பெருமை தேடித்தந்த தருமன் மா மன்னன் என்ற புகழுக்கு உரியவன் ஆனான். அரவக் கொடியோன் ஆகிய துரியனும் அவன் உறவினரும் தருமனிடம் விடை பெற்றுப் பின் அத்தினாபுரம் நோக்கிச் சென்றனர். திரெளபதியின் தந்தை துகுபதனும், விராட அரசனும் தத்தம் பதிகளுக்குப் போந்தனர்; சல்லியன் முதலிய பெருநில மன்னர்கள் தத்தம் பதிகளை அடைந்தனர்; தருமன் தன் தம்பியரின் துணையோடு நாட்டை நல்லபடி ஆண்டு நற்புகழ் பெற்றான்; கண்ணனும் அனைவரையும் வாழ்த்திவிட்டுத் துவாரகையை அடைந்தான்.

3. சூது போர்

செல்வமும் சிறப்யும் கொண்டு செங்கோல் செலுத்திய சீர்மையுடைய தருமனின் புகழைக் கண்டு புழுக்கங் கொண்டு துரியன் தன் நெருங்கிய சுற்றத்தினரை வையின்கண் கூட்டி அழுக்காறு படப் பேசினான். கார் துடைத்துக் கொண்டு காலம் கடத்திய சாமானியன் ஒருவன் கார் ஒட்டிக் கொண்டு குளு குளு அறையில் குதூகலமாக இருக்கிறான் என்றால் அவனோடு ஆறாம் வகுப்பில் படித்த ஆறுமுகத் தால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? நேற்று எப்படி இருந்தான். இன்று இப்படியாகிவிட்டான் என்று பேசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/115&oldid=1036557" இலிருந்து மீள்விக்கப்பட்டது