பக்கம்:மாபாரதம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

115

கொடைவள்ளல் கன்னன், சிசுபாலன், அண்ணன் துரியன் இவர்கள் இல்லையா? கேள்வி கேட்ட அவனை வேள்வியிலே எரிக்கும் அவிசு என நசுக்கியது அடுக்குமா? ஒரு சிசுபாலன் செத்தான் என்றால் அது அரச பாலர்களுக்கே அவக்கேடு ஆகாதோ? அவர்கள் கட்டிய மண்டபத்தை இடித்துத்தள்ளினால் தவிர இதற்கு எல்லாம் ஒட்டிய முடிவு காண முடியாது” என்று கூறினான்.

தம்பிக்கு ‘சபாஷ்’ பட்டம் கொடுத்து அவனைத் தட்டிக்கொடுத்து அவர்களை வெல்வதுதான் அடிப்படை. அது போரில் என்று இருக்கத் தேவை இல்லை; அதில் அவர்களை அசைக்க முடியாது என்றால் வஞ்சகத்தால் அவர்களை நசுக்கிக் கேடு சூழ்தலே தக்கது” என்றான் துரியன்.

தான் ஒருவனே அவர்கள் அனைவரையும் போரில் அழித்திடச் செய்ய முடியும் என்று கூறி மோது போரே தக்கது என்றான் கன்னன். அரச அவையில் மற்றவர் சிரிக்கப் பேசும் நகையாளி இல்லாத குறையைத் தீர்த்து வைத்துக் கன்னன் கோமாளித்தனமாகப் பேசிய உரைகள் அவையினர்க்குச் சலிப்பை ஊட்டின. குடித்துவிட்டு நடுத் தெருவில் குரல் கொடுத்து வீர மொழி பேசும் குடிகாரர் களைப் போல அவன் உரைகள் அவர்களுக்கு இருந்தன.

எதிரியின் ஆற்றலை எடுத்துப் பேசி அதற்குத் தான் எவ்வகையில் நிகர் என்று தொடுத்துப் பேசுபவனே அறிவாளி. தான்படித்த பட்டமும், அடைந்த கட்டமும், தான் வைத்துள்ள திட்டமும் மட்டும் பேசிக் கொண்டு தற் பெருமை தோன்றப் பேசும் போலித்தன்மை அவனிடம் வெளிப்பட்டது. தன் வில்லின் முன் விசயன் மட்டுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/118&oldid=1048186" இலிருந்து மீள்விக்கப்பட்டது