பக்கம்:மாபாரதம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

மாபாரதம்

அல்லாது எதிரிகள் அனைவரும் நிற்க முடியாது என்று பெருமை பேசினான்.

போர் என்பது கூட்டுப் பொறுப்பு:மாற்றான் வலிமையையும் சீர் தூக்கிப் பேசுபவன்தான் அறிவாளி ஆவான். கன்னன் கழறிய உரைகளில் இக்குறைகளை எடுத்துக்காட்டிச் சகுனி அவனைச் சொல்லால்சுட்டு அடக்கி விட்டான். இதுவரை அவன் விசயன் முன் வெட்கித் தலைகுனிந்த நாளை விவரித்துப்பேசினான். “திரெளபதியை மாலையிட்ட நாளில் இவன் மதிமயங்கிக் கிடந்தானா? விசயன் வில்லைக் காட்டியபோது எல்லாம் இவன் கைகட்டிக் கொண்டிருந்த கதை தெரியாதா?” என்று கேட்டான்.

“இடும்பன், பகன், சராசந்தன் இவர்களை வென்ற வீமன் தருமனின் தம்பி என்பதை மறந்து விடமுடியுமா?”

“வீரம் சோறு பேடாது; விவேகம்தான் வெற்றி தரும்” என்றான்.

கடந்த காலத் தோல்வி கன்னனின் நெஞ்சை முடக்கி வைத்தது; சகுனியின் சாதுரியமே தலை எடுத்தது. “மயன் கட்டிய மண்டபம் காட்டி நம்மை அழைத்து வியன் பெரும் செல்வத்தை விளம்பரம் செய்தான். வேள்வி செய்வதாகச் சொல்லி நம்மைக் கேலிக்குரியவர்கள் ஆக்கினான். அதே காயை நாம் திருப்பிப் போட்டு இவர்களை நாம் வகையாக மாட்டி வைக்க முடியும்” என்றான்.

“மண்டபம் ஒன்று கட்டு; அதைச் சொல்லி அவர்களை இங்கு வரவழைத்துக்காட்டு; உண்பதற்கு முன் அயர்ந்துஇருப்பார்கள்; மாமன் நான் இருக்கிறேன்; ‘ஆடுக தாயம்’ என்பேன். ‘குடுக வெற்றி’ என்று நீ சொல்; அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/119&oldid=1048187" இலிருந்து மீள்விக்கப்பட்டது