பக்கம்:மாபாரதம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

117

அகமனத்தைத் தட்டி எழுப்பு: ஆடாவிட்டால் அது தோல்வி என்று செப்பு. அவன் புகழ் வெறிகொள்வான். நெறி தவறுவான். அதனால் மானம் பறி போகும். தாயம் அவன் தாய பாகத்தைக் கவ்வும், சூதில் விழுபவன் துண்டி லில் விழும் மீன் போன்றவன். ஆரம்பம் எனது; அதற்கு மேல் அவன் துயரக் கதைக்குத்தொடர் அத்தியாயம் நீங்கள் அமைத்துக் கொடுக்கலாம். ஈட்டிய புகழ் எல்லாம் இழந்து விட்டுக் கைகட்டி நிற்கும் அடிமையாக ஆக்க முடியும், அவனை வெல்லும்போது மற்றவர்கள் தாமாக விழுந்து விடுவார்கள். அங்கே சிரித்துப் பேசிய ஒய்யாரி அவளை இங்கே ஒப்பாரி வைத்து அழவைக்க முடியும். அதுமட்டு மல்ல; சிசுபாலனைக் கண்ணன் கொன்றான். அதனால் சினந்த சல்லியன் போர் தொடுப்பான், கண்ணன் மீது படை எடுத்துச் சென்றுள்ளான். சல்லியன் வல்லியன். நாள் பல ஆகும். கண்ணன் மடக்கிப்போடப் படுவான்; அதற்குள் இவர்களை அடக்கிக்கூண்டில் வைத்துவிடலாம்” என்றான். இதுதான் தக்க சூழ்நிலை” என்றான்.

விதுரன் பத்திரிகைத் தலையங்கம் போல நடுநிலை ஏட்டி ன் பணியைச் செய்தான். “நாடு கேட்டு உன் தந்தை ஒரு ஏடு அனுப்பினால் போதும்; அதற்கு மறுப்புச் சொல்லாமல் அவனே வந்து தருவான்; பொன்னும் பொருளும் கேட்டாலும் அவற்றைப் பூமேல் வைத்துக் கொடுப்பான். பகை கொண்டு அழிப்பதை விடு. நகை கொண்டு உறவு வளர்ப்பதைத் தொடு, உலகம் உங்களைப் போற்றும். சகுனி சொல்லை நீவிர் மாற்றும். அதுதான் நல்லது ஆற்றும்” என்று பேசினான்.

கட்சித் தலைவர் சொல்வதை எதிர்த்துப் பேசும் தொண்டன் நிலைமைதான் விதுரனுக்கு ஏற்பட்டது. ‘தாசிக்குப் பிறந்த ஒசிச்சாப்பாடு நீ; ஒரவஞ்சனையோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/120&oldid=1048188" இலிருந்து மீள்விக்கப்பட்டது