பக்கம்:மாபாரதம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

மாபாரதம்

பேசுகிறாய்” என்றான். “புது பணக்காரனைக் கண்டு நீ மதிமயங்கி விட்டாய்; அதனால் எங்கள் சதிக்கு எதிர் நீ பேசுகிறாய். எடுபிடிக்கு ஆளாகச் செயல்பட வேண்டிய நீ மாடுபிடி சண்டையில் பங்கு கொள்வது ஏன்? என்று துரியன் அதட்டிப் பேசினான்.

விதுரன் புறக்கணிக்கப்பட்டான். தருமன் இயற்றிய மண்டபத்திற்கு நிகராக இவன் ஒரு மண்டபம் அமைத்தான். தன் தந்தையிடம் செய்தி சொல்லிப் பாண்டவர்க்கு அழைப்பு அழைப்புமாறு கூறினான். கடிந்து தடுக்க வேண்டிய தந்தை அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து போர் செய்து உங்களால் வெல்ல இயலாது, வஞ்சினம் செய்து போர் செய்வதை விட வஞ்சனையால் வெல்வதே தக்கது; அதற்குச் சூது போர்தான் மிக்கது. திட்டம் கனியச் சகுனி தவிர வேறு யாரும் உதவ முன் மாட்டார்கள். வெற்றி அடைய அவன் சொல்வதைப் பின் பற்றுவதே ஏற்றது” என்று கூறினான்.

விதுரன் பாண்டவருக்கு வேண்டியவன். அதனால் அவனை அனுப்பினால் பாண்டவர்கள் எதிர் ஒன்றும் பேசமாட்டார்கள். திருதராட்டிரனை அணுகி அவனைக் கொண்டு விதுரனையே பாண்டவர் பால் அனுப்பி வைத்தான். விதுரனுக்குச் செல்ல விருப்பம் இல்லை; எனினும் தமையனின் கட்டளைக்கு எதிர் சொல்ல முடியவில்லை.

பாண்டவர்களிடம் சென்ற விதுரன் கொண்டு வந்த செய்தியைச் சொன்னான். மண்டபம் காண அழைப்பதாகக் கூறினான். அவர்கள் திட்டத்தையும் தெளிவுபடுத்தினான். சூது போர் செய்து தருமனின் நாட்டையும் பொருள்களையும் கவர அவர்கள் திட்டம் இட்டு இருப்பதைக் கூறினான். அதற்குத் தருமன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/121&oldid=1036923" இலிருந்து மீள்விக்கப்பட்டது