பக்கம்:மாபாரதம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

மாபாரதம்


“தாயம் உருட்டத் தெரியாதவர்கள் வில் எடுத்து நாண் எங்கே பூட்டப் போகிறார்கள்? காய் வைக்கத் தெரியாதவர்கள் கரி பரி தேர் ஆள் இவர்களை எப்படி அணி வகுத்து அசைக்கப் போகிறார்கள் என்று வில் உண்டாக்கும் வடுவினைச் சொல் எடுத்துக் கன்னன் உண்டாக்கினான்; வீரம் மிக்க விசயன் வெகுண்டெழுந்தான்.

“வீட்டைக் கட்டி விட்டு வேடிக்கை காட்ட அழைத்தீர்; கேளிக்கை படப் பேசிச் சூது வழியாக எம்பொருளைக் கொள்ளை கொள்ளத் திட்டமிட்டீர். காய் வைத்து ஆடத் தெரியாது தான், உம் தலைவைத்துச் சாடத் தெரியும்; எடு வில்லை; விடு சொல்லை” என்று முழக்கம் செய்தான்.

வாதங்கள் பெருகி மோதல்கள் உண்டாவதைத் தவிர்க்தத் தருமன் எங்கள் பொருளைப் பறிக்கத்தானே இந்த ஆட்டம்; தேவையில்லை; கேள்; ஆடாமலே தருகிறேன்” என்றான்.

“வெற்றி தோல்வி என்பது இருவருக்கும் பொது. நீங்கள் வெல்ல மாட்டீர்கள் என்று நினைப்பது தவறு. தாயம் வைத்து ஆடு, காயை அகற்று. என் மாமனுக்காக எவ்வளவு வைக்க வேண்டுமானாலும் நான் வைக்கிறேன்; அத்தினாபுரியையே அடகு வைக்கச் சொல்கிறாயா நான் தயார். கேவலம் காசு செலவு ஆகும் எனறு அஞ்சிப் பின் வாங்குவது உன் பெருமைக்கு இழுக்கு” எனறான் துரியன். அதற்குமேல் அருச்சுனனைத் தருமன் பேசவிடவில்லை. அருச்சுனனை அடங்கி இருக்கும்படி கூறிவிட்டு ஆடும் பலகை முன் எதிர் எதிரே அமர்ந்தான்; அறம் மறந்தான்; அறிவு குறைந்தான்; தூண்டிலில் மீன் சிக்கிக் கொண்டது. அசையும் பொருள் அசையாப்பொருள் அனைத்தும் வைத்து ஆடினான்; இழக்கும்தோறும் குது அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/125&oldid=1036926" இலிருந்து மீள்விக்கப்பட்டது