பக்கம்:மாபாரதம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

125


“அத்தை மகள் நீ; அதனால் அவன் கற்றவித்தையைக் காட்டுகிறான். இதைப் பெரிதுபடுத்திக் கொள்ளலாமா? மூத்தவன் அழைக்கிறான்; உன்முத்துப் பல் ஒன்றும் உதிராது; உன்னைப்பார்க்க விரும்புகிறார்கள். நீ வியர்க்க அழுகிறாய் அரங்கில் சேர்த்து உன்னை ஆடவா அழைக்கிறான்? அவையில் உனக்கு ஆசனம் தருவான் என்றாள் பலபாதகரைப் பயந்த காந்தாரி. அவன் தொட்டு இழுக்க அஞ்சினான்; சட்ட விழ்ந்த மயிர் முடியைப் பற்றிக் கொண்டு அவளைத் தரதர என்று தரையோடு அவள் உடம்பு கறை பட இழுத்துச் சென்றான்; அவள் அழுது அரற்றினாள், கத்தினாள், கதறினாள்; அவள் சொற்கள் செவிடன் காதில் ஊதும் சங்கு ஒலி ஆயின.

“என் அண்ணன் கல்லில் தடுத்தபோது சொல்லிச் சிரித்தாயே! இங்கே வல்லில் தம்மை இழந்த உன் மகிபர்கள் முன் வந்து அவர்கள் அல்லல் கண்டு சிரி; அடிமையாகி விட்ட அவர்கள் மிடிமை பார்த்துச் சிரி; பீடு பெற்றுச் சீர் பெற்று உயர்ந்த வாழ்வு கேடு உற்றதே அதைப்பார்த்துச் சிரி; உங்கள் பிழைப்பு அம்பலத்துக்கு வந்துவிட்டதே அதைக்கண்டு சிரி, கட்டிய கணவர்கள் கை கட்டிக் கொண்டு சேவகம் செய்வதைப்பார்; விற்பிடித்த கையும், கதை எடுத்த தோளும், வாள் பிடித்த கரங்களும், கோல் பிடித்த முடியும் என் அண்ணனுக்கு வால் பிடித்துக் கொண்டு நிற்பதைப் பார்” என்று சொல்லி இழுத்து வந்தான்.

அவை நடுவே பெண்ணின் அவலக்குரல் கேட்டது; பெண் என்றால் என்ன என்று அறியாத மரக்கட்டையே! நீ மவுனம் சாதிப்பது ஏன்? என்று வீடுமனைப் பார்த்துக் கேட்டாள். “கல்விக்கு ஆசான் என்று சொல்லிக் கொண்டு கலைமகளை வழிபடும் துரோணரே! என்னை விலை மகளினும் கீழாக நடத்துவதைக் கண்டு சிலையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/128&oldid=1036930" இலிருந்து மீள்விக்கப்பட்டது