பக்கம்:மாபாரதம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

மாபாரதம்

நிற்கிறீரே ஏன்?” என்று கேட்டாள். “வில்லிலே விவேகம் உடையவர் என்று பேசும் விதுரரே! உம்சதுரவிளையாட்டு ஏன் அதிர்ந்து போய்விட்டது” என்றாள். கண் இழந்து வாழ்வில் ஒளி இழந்து இருப்பதைத்தவிர வெளுப்பு ஏதும் காணாத வேந்தனே! உன் செவிகளும் பார்வை இழந்து விட்டனவோ?” என்ற திருதராட்டிரனைக் கதறிக் கேட்டாள்.

செங்கோலுக்கு முன்னால் சங்கீதம் மவுனம் சாதித் தது; அறிவும் சால்பும் ஆட்சிக்கு அடிமைப்பட்டு அடங்கி விட்டன. வாயடைத்து அதிர்ச்சியில் ஆழ்ந்து கிடந்தனர். மனித இயல் அவன் செய்வது அடாது என்று அறிவிக்கிறது; சட்ட வியல் அவன் பக்கம் சாய்ந்து நின்றது. அடிமைப்பட்ட அவளை அழைத்துவர அவனுக்கு உரிமை இருக்கிறது என்பதால் அவர்கள் வாய் அடங்கிக் கிடந்தனர்.

அழுது பயன் இல்லை என்று அறிந்து அவள் அறிவைத் தீட்டினாள். கண்ணகி போல அறம் கூறும் அவையத் தைப் பார்த்து அறைகூவிக் கேட்டாள்.

“தன்னை வைத்துத் தோற்றுவிட்ட பிறகு என்னை வைத்து விளையாட என் மன்னன் தருமனுக்கு உரிமை ஏது? சட்டம் எப்படி என்னைக் கட்டுப்படுத்தும்? இந்தச் சின்ன அறிவு கூட இல்லாமல் தீர்ப்பு வழங்கியதைக்கண்டு தீர்ந்தது கடமை என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறீரே. உங்கள் வித்தகம் மெத்தனம் அடைந்தது ஏன்?” என்று கேட்டாள்.

மவுனம் குடி கொண்டது. மடமை துரியன்பால் வெளிப்பட்டது.

கிள்ளை மொழி பேசும் வள்ளைக் கொடியாளைத் துகில் உரித்துக் காட்டு; அப்பொழுது எழும் அழுகுரல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/129&oldid=1036931" இலிருந்து மீள்விக்கப்பட்டது