பக்கம்:மாபாரதம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

127

பாட்டு; அதை இந்த அவையோர்க்கு எடுத்துக்காட்டு; அதற்காக அவளை வாட்டு” என்றான் துரியன்.

அந்தத் தடிப்பையல் அந்தத் தையல் மீது கொண்ட மையல் காரணமாக அவளைத் தொட்டுத் துகில் உரிக்க அவள் சேலையைப்பற்றி இழுக்கச் சென்றான்.

இனி பொறுப்பது இல்லை தம்பீ! எரிதழல் கொண்டு வா; நெறிதவறிய தருமனைத் தீய்ப்போம்; வேள்வி மகளை வைத்து விளையாடிய அவனைக் கேள்வி கேட்க ஆள் இல்லை என்று நினைத்துக் கொண்டான்” என்று வீமன் கடிந்து பேசினான். “தருமத்தின் கையைச் சுட்டுப் பொசுக்குவோம்” என்றான். “யாரைப்பார்த்து நீ இவ்வாறு பேசுகிறாய்” என்று வருந்தி விசயன் ரத்தக் கண்ணிர் வடித்தான். மற்றும் தம்பியர் இருவரும் உள்ளக் குமுறலால் குமைந்து எதையும் உளறாமல் மனம் அழிந்து நின்றனர்; தருமன் தக்க உரை தந்தான்.

“பூக்க வேண்டிய மலர்கள் பூத்துக் காயாதலும் உண்டு. உதிர்ந்து கருகிப் போதலும் உண்டு. காற்று அடிக்கும் வேகத்தில் கீற்றுகள் மட்டும் அசைவதில்லை. அடிமரமும் ஆட்டம் கொடுக்கும், வேரோடு மரம் வீழ்ந்து சாய்தலும் உண்டு; வெள்ளம் வந்தால் அது பள்ளத்தில் மட்டும் பாயும் என்று கூற முடியாது; கரைகளையும் உடைத்துக் கொண்டு பெருக்கெடுத்து ஒடுதலும் உண்டு; முன்னம் பொறுத்தீர் இன்னும் பொறுப்பதுதான் நம் கடமை” என்று காந்தி மூர்த்தி போல சாந்தமூர்த்தி தருமன் பேசினான்.

“கட்டுண்டோம் காலம் மாறும்” என்று ஆறுதல் அடைந்தனர் பாண்டவர் ஐவரும். விகர்ணன் என்னும் துரியனின் கடைசித்தம்பி துணிந்து எழுந்தான். இது பேடித்தனம்; அடிமையாகி விட்டால் அவர்களை அவமானப் படுத்த வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/130&oldid=1048191" இலிருந்து மீள்விக்கப்பட்டது