பக்கம்:மாபாரதம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

129


பால் மணம் மாறாத பாலகர்கள் நீங்கள். அரச அவையில் பங்குகொள்ள உங்கள் மீசை நரைக்கவில்லை; அண்ணனை எதிர்த்துப்பேசத் திண்மை உனக்கு எவ்வாறு வந்தது? தம்பி என்றால் படைக்கு அஞ்சாமல் இடும் கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அண்ணன் பேசும் போது அடக்கம் தான் உனக்கு அணிகலன்; சட்டம் தெரியாமல் உன் இட்டம் போல் பேச உனக்கு உரிமை கொடுத்ததே தவறு.

“அவன் மாடுமனை வீடு என்று சொல்லித்தானே பந்த யப் பொருளாக வைத்தான்; வீட்டில் இருக்கும் மனைவி யும் வீட்டில் அடங்காதோ? ‘இல்’ எனப்பட்டது இல்லாளைக் குறிக்காதோ? அவன் உடைமைகளில் மனைவியும் ஒருத்தி ஆக மாட்டாளோ? சட்டம் படிக்காமல் சபையில் பேசுவது சரியாகாது” என்றான். “இது தவறு என்று பட்டால் பேசாமல் வெளியே நடந்து காட்டுவதுதான் அரச அவையின் நடைமுறை.”

துரியனின் ஆதிக்கம் அவையோர் விவேகத்தை அடக்கிவிட்டது.

சிலைகள் வைப்பதற்கு நிதிகள் திரட்டத் தேவை இல்லை. சிற்பிகளின் கைவண்ணம் அதுவும் தேவை இல்லை, துரியனின் அவையில் மாந்தர் எல்லாம் சிலைகளாக மாறி விட்டனர். அந்தக் கலைத் திட்பம் துரியனிடம் இருந்தது.

அவள் கூந்தல் சரிந்தது; சேலை நெகிழ்ந்தது. மானம் குலைந்தது; அவையில் ஒழுங்கு தலை கீழ் ஆகியது.

அவள் மனநிலையை வில்லியின் சொற்களில் தருவது சிறப்புடைத்து. செயல் இழந்து கண்ணனை மனத்தில் நினைந்து தன்னை மறந்து நின்றாள்.

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/132&oldid=1048193" இலிருந்து மீள்விக்கப்பட்டது