பக்கம்:மாபாரதம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

மாபாரதம்

தருமம் வென்று விட்டது. சகுனி பக்கம் காய் தலை சாய்க்கவில்லை; தருமம் கை கொடுத்துத் தூக்கியது. தருமமே தலை காக்கும் என்பதற்கு அவர்கள் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியது.

தன்னை அவையில் “பலர் முன் கொண்டு வந்து நிறுத்து” என்று அவதூறு பேசிய துரியனின் தொடை வழியே குருதி கொட்ட அந்த இரத்தத்தைக் கொண்டு தான் விரித்த கூந்தலை முடிப்பதாகச் சபதம் எடுத்தாள். அதைத்தொடர்ந்து வீமன் தன் கதாயுதத்தால் அவன் கதையை முடிப்பதாக வஞ்சினம் செய்தான்; அருச்சுனன் கன்னனைத் தீர்த்துக் கட்டுவதாக அவனைப் பார்த்துக் கூவினான்; நகுலன் சகுனியின் மகன் உலூகனை உலுக்கிக் குலைப்பதாகக் கூறினான். சகாதேவன் குள்ள நரியாகச் செயல்பட்ட கள்ளச்சிந்தை உடைய சகுனி மீது பாய்ந்தான். ஆளுக்கு ஒருவரைக் குறிவைத்துப் பேசினர். வீமன் துரியனை முடிக்கும் வரை நீரைக் கையால் அள்ளிப் பருகிக் குடிப்பதில்லை என்றான். தண்டு கொண்டு தண்ணிரை மேல் எழுப்பி அத் துளிகளைப் பருகுவதாக அறிவித்தான்.

தருமத்தைப் பணயமாக வைத்து ஆடிய வெற்றி அவர்களுக்கு விடுதலை தந்தது; முழு உரிமை கிடைத்தது; அவர்களை இனி யாரும் கட்டிப்போட முடியாது; விட்டு விடுதலையாகி நின்றார்கள். அப்பொழுதே அவர்கள் போரில் எதிர்த்து நாட்டைப் பெறும் உரிமை இருந்தது. வீரர்களுக்கு உள்ள உரிமை பறிபோகவில்லை. அவர்கள் உடனே படைதிரட்டிப் பாரினை வவ்வியிருந்தால் துரியன் வேரோடு அழிந்து இருப்பான். அந்தச் சூழ்நிலையைத் தடுக்கத் திருதராட்டிரன் மற்றொரு சூழ்ச்சி செய்தான்.

இராமாயணக் கதையை எடுத்துக் காட்டி, “நீங்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டுக்குச் சென்று தவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/135&oldid=1048194" இலிருந்து மீள்விக்கப்பட்டது