பக்கம்:மாபாரதம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

மாபாரதம்

குந்தி தேவிக்கு அல்ல; காட்டு வழியில் மேட்டு நிலத்தில் அவர்களை அலைக்கழித்து அல்லல் உறச் செய்வதால் பயன் இல்லை; அதனால் குந்தியை நாட்டிலேயே விட்டு விடும்படி கண்ணன் அறிவுரை கூறினான். விழியில்லாக் காந்தாரியோடு வேறு வழி இல்லாது குத்தி தங்கி வாழுமாறு ஏற்பாடுகள் செய்தனர்.

பெற்ற பிள்ளைகளை உற்ற சுற்றத்தினிடையே சேர்ப்பது தக்கது என முடிவு செய்தனர். பாஞ்சாலியின் பிள்ளைகளைத் துருபதன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். பாட்டன் வீட்டுக்குப் பேரப் பிள்ளைகள் அனுப்பப் பட்டனர்.

அதற்குப் பிறகு அவர்கள் செய்ய வேண்டியது பன்னிரண்டு வருஷங்கள் வனவாசம்; ஒரு வருஷம் அஞ்ஞாத வாசம்; அதற்குப் பிறகுதான் சுகவாசம் என்று பேசப் பட்டது.

நாடு திரும்ப அடைவது எளிது அன்று ஆண்டவன் பார் மீண்டும் அவர்க்கு விட்டுக் கொடுப்பான் என்பது உறுதி இல்லை. போர் மூண்டால் அதற்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினர்.

அருச்சுனன் தவ யாத்திரை

வியாசன் அங்குவந்து வரப்போகும் பாரதப்போருக்கு மாரதர்கள் ஆகிய பாண்டவர்கள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினான்.

அருச்சுனன் சிவனிடம் சென்று பாசுபத அத்திரம் பெற்று வரும்படி பணித்தான்; தவம் செய்தால் சிவன் அருள் செய்வான் என்று கூறினான்.

தவயாத்திரை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அனைவரிடமும் விடைபெற்றுச் சடைமுடி தரித்துத் தவக்கோலம் மேற்கொண்டு கயிலை நோக்கிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/137&oldid=1037267" இலிருந்து மீள்விக்கப்பட்டது